சுமன் சஹாய்
சுமன் சகாய் (Suman Sahai) ஒரு இந்திய செயற்பாட்டாளர் மற்றும் இந்தியாவில் மரபணு குறித்த பிரச்சாரத்தின் இயக்குநர். வாழ்க்கைசகாய் முதுகலை முனைவர் பட்டத்தை இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தில் 1975 ஆம் ஆண்டு பெற்றார்[1]. பின்னர் ஆல்பர்ட்டா பல்கலைக்கழகம், சிக்காகோ பல்கலைக்கழகம், ஐடல்பேர்க் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பணியாற்றினார். ஐடல்பேர்க் பல்கலைக்கழகத்தில், அவர் மனித மரபியல் ஆராய்ச்சியைத் தொடங்கினார்.[2] சகாய் 40 கட்டுரைகளைச் சமர்ப்பித்தார்.[3] இதில் பெரும்பாலான மரபியல் ரீதியான கொள்கை வெளியிட்டார். இது மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள் தொடர்பான கொள்கையில் பெரும் மாற்றத்தை உருவாக்கியது. செயற்பாடுகள்சகாய் லட்சகணக்கான விவசாயிகளின் ஒன்றுமித்த குரலாக திகழ்க்கிறார். இவர் வேம்பு மற்றும் மஞ்சள் காப்புரிமைக்கு எதிராக குரல் கொடுத்தவர். அவர் இயற்கையின் தொழில்நுட்பம் மனித குலத்தின் தேவைகளைப் பூர்த்தி முடியும் என்று நம்புகிறார்.[சான்று தேவை] சர்ச்சைகள்ஏப்ரல் 2013 இல் சகாய், அவரது 1986 ஆம் ஆண்டின் ஐடெல்பர்க் பல்கலைக்கழக ஆய்வில் பிறரது படைப்புகளைத் தனதாகக் கையாண்டுள்ளதாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளானார்.[4][5] அதோடு உண்மையில் ஐடெல்பர்க் பல்கலைக்கழகப் பேராசியராகப் பணியாற்றாமல் தன்னைத்தானே அவ்வாறு போலியாகக் காட்டிக்கொண்டார் என்ற குற்றச்சாட்டுக்கும் ஆளானார்.[4] ஏப்ரல் 14, 2013 இல் பல்கலைக்கழகமும் அவரது படைப்புத் திருட்டையும், அவர் தன்னை அப்பல்கலைக்கழக பேராசியர் எனக் கூறிக்கொள்ளும் உரிமையற்றவர் என்பதையும் உறுதி செய்ததைத் தொடர்ந்து சகாய் தனது ஆய்வுப் பட்டத்தைத் துறக்க நேர்ந்தது.[4][6] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia