சுமன் ரங்கநாதன்
சுமன் ரங்கநாதன் அல்லது ரங்கநாத், [2] இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்த விளம்பர நடிகையும், திரைப்பட நடிகையுமாவார். கன்னடம், பெங்காலி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் சுமன் நடித்து வருகிறார். தனிப்பட்ட வாழ்க்கைசுமன் ரங்கநாதன்,ஜூலை 26, 1974 ம் ஆண்டில் இந்தியாவின் கர்நாடக மாநிலம் தும்கூரில் பிறந்துள்ளார்.[3] சித்லிங்கு (2012), ஆகாஸ் (2000) மற்றும் இஷ்க் கயாமத் (2004) ஆகிய படங்களில் நடித்ததற்காக அறியப்பட்ட இவர், இந்திய திரைப்பட தயாரிப்பாளரான பன்டி வாலியாவை 2006 ம் ஆண்டு இறுதியில் திருமணம் செய்தார். ஆனால் எட்டே மாதங்களில் இவர்களது திருமணம் முடிவுபெற்றது. பின்னர் 3 ஜூன் 2019 அன்று கர்நாடகாவின் கொடுகு மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபரான சாஜன் சின்னப்பாவை மணந்துள்ளார்.[4] திரைப்படத்துறைகன்னட நடிகரான, சங்கர் நாக் உடன் இணைந்து சிபிஐ ஷங்கர் (1989) என்ற கன்னடத் திரைப்படத்தில் முதன்முறையாக நடிகையாக அறிமுகமான இவர், அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு, பாலா ஹோம்பலே (1989), டாக்டர் கிருஷ்ணா (1989) சாந்தா சிசுனாலா ஷரீஃபா (1990) மற்றும் நம்மூரா ஹம்மேரா (1990) என பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். 1990 ஆம் ஆண்டு புது பாட்டு என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார்.[5] தொடர்ந்து, பெரும்புள்ளி (1991), மாநகர காவல் (1991), குறும்புக்காரன் (1991), உன்னை வாழ்த்தி பாடுகிறேன் (1992), மேட்டுப்பட்டி மிராசு (1994) மற்றும் முதல் உதயம் (1995) போன்ற பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார். பாரேப் என்ற 1996 ம் ஆண்டு வெளியான இந்தித் திரைப்படத்தின் மூலம் அங்கு அறிமுகமானார்.சட்டவிரோத நுழைவு என்ற பெயரில் 1992 ம் ஆண்டில் ஆங்கிலத்தில் வெளியான திரைப்படத்தின் தழுவலாகும். 1999 ம் ஆண்டில் வெளியான ஆ அப் லாட் சாலனில் இந்திய-அமெரிக்க சமூகவாதியாக நடித்துள்ளார்.[6] மிஸ்டர் இந்தியா வேர்ல்ட் 2007க்கான நடுவர்கள் குழுவில் ரங்கநாத்தும் இருந்துள்ளார்.. இவர் கலர்ஸ் கன்னடத்தில் ஒளிபரப்பாகும் கன்னட யதார்த்த நிகழ்ச்சியான தகதிமிதாவின் நடுவராக இருந்துள்ளார்.[7] முழு மூச்சாக கன்னட படங்களில் மட்டுமே நடிக்கத்தொடங்கிய சுமன், ஏறக்குறைய பதினெட்டு ஆண்டுகளுக்கு பின்னர் கடுமையான பத்திரிகையாளர் வேடத்தில், நடிகர் அஜித்குமார் நடித்த, ஆரம்பம் (2013). திரைப்படத்தில் மீண்டும் நடித்துள்ளார்.[8] பல வெற்றிகரமான படங்களில் நடித்துள்ள சுமன், நீர்நிலை (2016) மற்றும் கவனுதாரி (2019) போன்ற பல திரைப்படங்களின் வெற்றிக்கு காரணமாகவும் இருந்துள்ளார்.[9][10] திரைப்படவியல்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia