சுரேஷ் ரவி
சுரேஷ் ரவி, (Suresh Ravi) என்பவர் இந்தியத் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை வழங்கி பின்னர் திரைப்பட நடிகரானவர். இவர் முக்கியமாக தமிழ் படங்களில் தோன்றி வருகிறார். சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஒரு தொகுப்பாளராக பல்வேறு நிகழ்ச்சிகளுடன் தொடர்பு கொண்டிருந்தார். இவர் 2016இல் வெளிவந்த மோ என்ற தமிழ்ப் படம் மூலம் அறிமுகமானார். தொழில்சுரேஷ் ரவி சென்னையில் பிறந்து வளர்ந்தவர். ஜெயா பொறியியல் கல்லூரியில் தனது கணினி அறிவியல் பட்டத்தைப் பெற்ற இவர், இன்ஃபோசிஸில் திட்ட மேலாளராக பணியாற்றுவதற்கு முன்பு சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொலைக்காட்சித் தொகுப்பாளாராக பணியிலிருந்தார். பின்னர் இவர் இன்போசிஸில் தனது வேலையை விட்டுவிட்டு சுமார் ஆறு மாத காலத்திற்குப் பிறகு மீண்டும் சன் மியூசிக் நிறுவனத்தில் சேர்ந்தார். புவன் நுல்லான் எழுதி இயக்கி 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் திகில் திரைப்படமான மோ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஐஸ்வர்யா ராஜேஷ், ரமேஷ் திலக், தர்புகா சிவா ஆகியோரும் இதில் முக்கிய கதைப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். முனீஷ்காந்த் ராம்தாஸ், பூஜா தேவரியா, செல்வா, மற்றும் மைம் கோபி ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர். [1] [2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia