ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ் (Aishwarya Rajesh) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு... நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் (2010) தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார். அட்டகத்தி (2012) திரைப்படத்தில் அமுதா என்ற பாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்றார். 2017 இல் டாடி என்ற இந்தித் திரைப்படத்தில் அர்ஜூன் ராம்பாலுடன் இணைந்து நடித்தார். வெற்றிமாறனின் வட சென்னை திரைப்படத்தில் பத்மா என்ற பாத்திரமாகவும், கனா திரைப்படத்தில் பெண் துடுப்பாட்டாளராகவும் நடித்துப் பெரும் புகழ் பெற்றார். 2014 இல் காக்கா முட்டை திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது இவருக்குக் கிடைத்தது.[1] வாழ்க்கைஐஸ்வர்யாவின் தந்தை ராஜேஷ் தெலுங்குத் திரைப்படங்களில் 50 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இவருடைய தாத்தா அமர்நாத்தும் ஒரு தெலுங்கு நடிகர் ஆவார். இவர் மகளிர் எத்திராஜ் கல்லூரியில் படித்தார். இவர் ஒரு இளங்கலை பட்டதாரி ஆகும். இவர் கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் பங்குப்பெற்று வெற்றியாளராக வந்தார். 2011ம் ஆண்டு 'அவர்களும் இவர்களும்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அட்டகத்தி படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். அதைத் தொடர்ந்து 'ஆச்சரியங்கள்' மற்றும் புத்தகம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். அப்படத்தையடுத்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தார். வாடி வாசல், திருடன் போலீஸ் போன்ற திரைப்படங்களில் நடிக்கின்றார். திரைப்படங்கள்
சின்னத்திரை
விருதுகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia