சுற்றுச்சூழல் ஆர்வலர் (Environmentalist) என்பர் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அக்கறை கொண்ட மற்றும்/அல்லது சுற்றுச்சூழலுக்கு ஆதரவாக வாதிடும் நபர் ஆவார். சுற்றுச்சூழல் ஆர்வலரைச் சுற்றுச்சூழல் இயக்கத்தின் குறிக்கோள்களின் ஆதரவாளராகக் கருதலாம். சுற்றுச்சூழல் இயக்கம் என்பது "சுற்றுச்சூழல் தீங்கு விளைவிக்கும் மனித நடவடிக்கைகளில் மாற்றங்கள் மூலம் இயற்கை சூழலின் தரத்தை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் முயற்சிக்கும் ஒரு நெறிமுறை இயக்கம்".[1] ஒரு சுற்றுச்சூழல் வாதி இத்தகைய சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் அல்லது சூழலியம் குறித்த நம்பிக்கை கொண்டவர்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சில சமயங்களில் "பசுமையாளர்" மற்றும் "மரம்-தோழர்" போன்ற முறைசாரா சொற்களைப் பயன்படுத்திக் குறிப்பிடப்படுகிறார்கள்.[2]
தாக்கம்: சுற்றுச்சூழல் இயக்கம் இன்றைய அமெரிக்காவை 1960கள் மற்றும் 1970களில் இயக்கம் தொடங்கியதை விடச் சுற்றுச்சூழல் நட்பு ரீதியான இடமாக மாற்றியுள்ளது (கோல்ட்ஸ்டீன் 2002).
குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்
மே 2003 இல் சர் டேவிட் அட்டன்பரோ பீட்டர் காரெட் 2004 ஆஸ்திரேலிய கூட்டாட்சி தேர்தலில் பிரச்சாரம் செய்தார்அல் கோர், 2007 ஹண்டர் லோவின்ஸ், 2007 பில் ராட்போர்ட், 2011 ஹக்கோப் சனசார்யன்- ஸோடோக்கில் தாது-செயலாக்க சட்டவிரோத கட்டுமானத்திற்கு எதிரான செயற்பாட்டாளர்- 2011கிரெட்டா துன்பெர்க், 2018அடிலெய்டில் 2014 இல் கெவின் புசாகோட் (பழங்குடி ஆர்வலர்)
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்காகப் பரப்புரை செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ள குறிப்பிடத்தக்கச் சுற்றுச்சூழல் ஆர்வலர்களில் சிலர்:
சமீபத்திய ஆண்டுகளில், இயற்கை சூழலுக்கான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மட்டுமல்ல, மனித சுற்றுச்சூழலுக்கான சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் உள்ளனர். உதாரணமாக, இணையம், வடத் தொலைக்காட்சி மற்றும் திறன்பேசிகளின் தீமைகளை அகற்றுவதன் மூலம் "மனதில் பசுமை இடத்தை" ஏற்படுத்தும் ஆர்வலர்கள் "தகவல்-சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள். [5]