லியோனார்டோ டிகாப்ரியோ
லியோனார்டோ டிகாப்ரியோ (Leonardo Wilhelm DiCaprio, பிறப்பு: நவம்பர் 11, 1974) ஓர் அமெரிக்கத் திரைப்பட நடிகர். டைட்டானிக் படத்தின் மூலம் உலகப் புகழ் பெற்றார்.[1][2][3] பிறப்பும் ,இளமை பருவமும்லியோனார்டோ வில்ஹெல்ம் டிகாப்ரியோ நவம்பர் 11, 1974 அன்று லாஸ் ஏஞ்சலீசு, கலிபோர்னியாவில் பிறந்தார், தாயார் இர்மெலின் டிகாப்ரியோ செருமானிய உருசியக் கலப்பில் பிறந்தவர் .தந்தை சித்திரக்கதைக் கலைஞரான ஜார்ஜ் டிகாப்ரியோ. இத்தாலிய-செருமானியக் கலப்பில் பிறந்தவர். இவர்களின் ஒரே குழந்தை லியோனார்தோ. இவருடைய பெயரின் நடுப்பகுதி வில்ஹெல்ம், தாய் வழியில் வந்த பாட்டனாரின் குடும்ப பெயர். டிகாப்ரியோ "லெனி வில்லியம்ஸ்" என்ற பெயரில் நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சியில், கல்வி சம்பந்தப்பட்ட நிகழ்விலும் தோன்றினார். டிகாப்ரியோ ஆரம்பத்தில் சிறிய வேடத்தில் நடித்தும், குறைந்த செலவில் தயாரிக்கப்படும் படங்களிலும் நடித்து வந்துள்ளார். ரோமியோ ஜூலியட் (1996) திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகரானார். டைட்டானிக் (1997) மூலம் உலகப் புகழ் பெற்றார். அடுத்தடுத்து நடித்த மூன்று படங்கள் அவரை கதாநாயகன் அந்தஸ்தை உறுதிப்படுத்தின. சொந்த வாழ்க்கைடிகாப்ரியோவின் காதல் உறவுகள் பரவலாக ஊடகங்களில் பரவி வருகின்றன. 90 களின் பிற்பகுதியில் நடிகை பிஜோ ஃபிலிப்ஸ், மாடல் அழகி கிறிஸ்டன் சாங்க் மற்றும் பிரித்தானிய அழகி சமூக எம்ம மில்லர் மூவரையும் காதலித்தார். 2000 ஆம் ஆண்டில் அவர் பிரேசில் அழகி கீசெல் பஞ்சன் மீது தீராத காதல் கொண்டார். இந்த காதல் 2005 வரை சுவைத்தது. 2005 முதல் 2011 வரை இசுரேலிய அழகி பார் ரெஃப்பீலிடன் காதல் கொண்டிருந்தார், ரெஃப்தீலியின் சொந்த ஊரான ஹாட் ஹேர்ரோனுக்கு சென்றார். சொத்துகள்டிஸ்கபிரியோ லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு இல்லத்தையும், நியூயார்க்கிலுள்ள பேட்டரி பார்க் சிட்டி யில் ஒரு வீட்டையும் வாங்கினார். 2009 ஆம் ஆண்டில், பெலீசில் இருந்து ஒரு தீவை வாங்கினார், அதில் அவர் ஒரு சுற்றுச்சூழல், மற்றும் சுற்றுலா மையத்தை உருவாக்க திட்டமிட்டார். 2014 ஆம் ஆண்டில், கலிபோர்னியா, பாம் ஸ்பிரிங்ஸில் நூற்றாண்டின் நவீன கட்டிடக்கலைஞர் டோனால்ட் வேக்ஸ்லெரால் வடிவமைக்கப்பட்ட அசல் டினா ஷோ குடியிருப்பு ஒன்றையும் வாங்கியுள்ளார் எதிர்பாராத விபத்து2005 ஆம் ஆண்டில், காப்ரியோவின் முகம் கடுமையாக காயமுற்றது, மாடல் ஆர்த்தா வில்சன் அவரை உடைந்த சீசாவினால் தாக்கினார். இதனால் காதுப்பகுதியில் பதினேழு தையல் போடப்பட்டது. மாடல் ஆர்த்தா வில்சன் 2010 ல் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு சிறையில் அடைக்கப்பட்டார். அரசியல்அரசியலில் 2004 அதிபர் தேர்தலில் ஜான் கேரிக்கு ஆதரவு அளித்தார், 2008 மற்றும் 2012 தேர்தலில் ஒபாமாவுக்கு ஆதரவாய் பிரசாரம் மேற்கொண்டார். பிற சிறப்புகள்
நடித்த திரைப்படங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia