சுவர்ணமுகி (பரதநாட்டியக் கலைஞர்)சுவர்ணமுகி என்பவர் ஓர் இந்தியப் பரதநாட்டியக் கலைஞர் ஆவார். இவர் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகேயுள்ள நாயுடு பேட்டையைச் சேர்ந்தவர். இவரின் பெற்றோர் திரைப்பட நடன இயக்குநர் சம்பதி பூபாலும் ரஞ்சனியும் ஆவார்கள். இவர் 108 மரபு நடனக் கரணங்களைக் கற்றுத் தேர்ந்த முதல் பெண் ஆவார்[1]. இவர் நிறைய மேடைகளில் பாம்பு நடனம் மற்றும் மயில் நடனம் ஆடியுள்ளார். நடனப் பயிற்சிசுவர்ணமுகி மூன்று வயதிலிருந்து நடனம் கற்று வந்துள்ளார். இவர் நட்டுவனார் துரைசாமி என்பவரிடம் நடனம் பயின்றார். இவரின் தந்தை பூபால் கரணங்கள் மீது ஈடுபாடு கொண்டவர் (கை கால் உடல் என அனைத்தையும் ஒருங்கிணைத்த இசைவு அதன் ஓர் உறைநிலை தருணம் கரணம்)[2] 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான கோயில்களுக்குச் சென்று சிற்பங்களை ஆராய்ந்து 108 கரணங்களையும் மகள் சுவர்ணமுகிக்குப் பயிற்றுவித்துள்ளார் பூபால். 108 கரணங்களை உள்ளடக்கிய நடனத்தை ஆடிய முதல் பெண் சுவர்ணமுகி மற்றும் இன்று வரையில் இவர் மட்டுமே அதனை கற்றுத் தேர்ந்த ஒரே நபர்[சான்று தேவை]. நடன வாழ்க்கைநெல்லூரில் முதல் முதலில் மேடையேறி ஆடினார். அதன் பின் தொடர்ச்சியாக நிறைய நிகழ்ச்சிகளில் ஆடிய இவர் சினிமாவிலும் மரபு நடனம் ஆடியுள்ளார்[3]. ‘ராஜரிஷி’, ‘புன்னமி நாக்’ என்ற தெலுங்கு படம், தமிழிலும் ஹிந்தியிலும் வெளிவந்த ‘பௌர்ணமி’ போன்ற திரைப்படங்களில் இவருடைய நடனங்கள் இடம்பெற்றுள்ளன. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் தன் முதல் மாதக் குடியரசுத் தலைவர் ஊதியத்தை வழங்கி, ‘எலும்பே இல்லாத நடனமங்கை’ என்று இவரைப் பாராட்டினார்[4]. 1977 ஆம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற சர்வதேச நடனப் போட்டியில் கலந்து கொண்டு இவர் முதல் பரிசை வென்றார். 1982 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் ஆடினார். ஐரோப்பா, அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா, இலங்கை, மலேசியா என பல்வேறு நாடுகளில் இவர் நடனம் ஆடியுள்ளார். 52 நாடுகளில் இவர் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆடியிருப்பது குறிப்பிடத்தக்கது[5]. விருதுகள்
பெயர் மாற்றம்கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் நடன வாழ்க்கையில் ஈடுபட்ட சுவர்ணமுகி, 1988 ஆண்டு சைதாப்பேட்டை ஏஜி சபையில் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்துவ மதத்தைத் தழுவினார். 'வொரோனிகா சுவர்ணமுகி' என்று தன் பெயரை மாற்றம் செய்து கொண்ட இவர் 1991 ஆண்டுக்குப் பிறகு எந்த மேடையிலும் ஆடவில்லை. தொழு நோயாளிகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உதவுவது என்று மக்கள் பணி செய்து வருகிறார்[6]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia