சு. கல்யாணசுந்தரம்

சு. கல்யாணசுந்தரம் (S. Kalyanasundaram)(பிறப்பு சூன் 24, 1940) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழகத்தினைச் சார்ந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார்.

இவர் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பம்பப்படையூர் கிராமத்தினைச் சார்ந்தவர். இவரது தந்தை சுந்தரராஜன் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவர்களில் ஒருவர் ஆவார்.[1] கும்பகோணம் அரசுப் பள்ளியில் கல்வி பயின்ற கல்யாணசுந்தரம், திராவிட இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். இவர் திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதி ஆவார்.[2]

வகித்தப் பதவிகள்

ஒருங்கிணைந்த கும்பகோணம் ஒன்றியப் பெருந்தலைவர், தஞ்சை மாவட்ட கூட்டுறவு பால்வள தலைவர், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவராக எனப் பலபொறுப்புகளை வகித்துள்ளார். இவர் தற்பொழுது திராவிட முன்னேற்றக் கழகத்தின் வடக்கு மாவட்டச் செயலாளராக உள்ளார்.[3]

நாடாளுமன்ற உறுப்பினர்

கல்யாணசுந்தரம் 2022ஆம் ஆண்டு சூன் மாதம் நடைபெற இருந்த நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினருக்கான தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக மனுத்தாக்கல்செய்திருந்தார். இத்தேர்தலில் போட்டி இல்லாததால், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.[4]

குடும்பம்

கல்யாணசுந்தரம் கனகவள்ளி என்பரைத் திருமணம் செய்து கொண்டார். இந்த இணையருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவர்களில் முத்துச்செல்வன் என்ற மகன் தற்போது மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவராக உள்ளார்.

மேற்கோள்கள்

  1. "காங்கிரஸ் குடும்பம்... திமுக எம்பி வேட்பாளர்.... எஸ்.கே. குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்!". Samayam Tamil. Retrieved 2022-06-04.
  2. "எம்.பி ஆகும் 82 வயது கல்யாணசுந்தரம்: 2 ஏக்கர் நிலம் தானம் கொடுத்த குடும்ப வாரிசு". Indian Express Tamil. Retrieved 2022-06-04.
  3. "வெளியான ராஜ்யசபா வேட்பாளர் பட்டியல்: யார் இந்த தஞ்சை கல்யாணசுந்தரம்? கடைகோடி தொண்டனையும் கொண்டாடும் திமுக". Kalaignar Seithigal. Retrieved 2022-06-04.
  4. Ali, Noorul Ahamed Jahaber (2022-06-03). "திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளில் 6 பேர் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு". tamil.oneindia.com. Retrieved 2022-06-04.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya