சு. ஜெயலட்சுமி
சுந்தரம் ஜெயலட்சுமி (25 சூலை 1920 – 21 சூலை 2007) தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இவர் 1930, 1940 ஆம் ஆண்டுக்காலங்களில் திரைப்படங்களின் கதாநாயகியாக நடித்துள்ளார். கர்நாடக சங்கீதவான்களான, சு. ராஜம் மற்றும் சு. பாலச்சந்தர் இவருடைய சகோதரர்கள் ஆவர். இவர் சிவகவி, சீதா கல்யாணம் முதலிய திரைப்படங்களில் நடித்துள்ளார். வாழ்க்கைக் குறிப்புஜெயலட்சுமி 1920 சூலை 25 இல் சென்னையில் வழக்கறிஞரான வி. சுந்தரம் ஐயர், பார்வதி ஆகியோருக்குப் பிறந்தார். 1933 இல் வி. சாந்தாராம் தமிழ்த் திரைப்படம் ஒன்றைத் தயாரிக்க விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருந்தார். சுந்தரம் ஐயர் அவருக்கு உதவவென குடும்பத்துடன் கோலாப்பூர் சென்று சீதா கல்யாணம் திரைப்படத்தில் நடித்தனர். ஜெயலட்சுமி இதில் சீதையாகவும், அண்ணன் சு. ராஜமையர் இராமராகவும் நடித்தனர்.[1] மறைவுஜெயலட்சுமி 2007 சூலை 21 இல் பெசண்ட் நரில் உள்ள அவரது இல்லத்தில் தனது 86-வது அகவையில் காலமானார்.[2] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia