வி. சாந்தாராம்
வி. சாந்தாராம் (V. Shantaram / Shantaram Rajaram Vankudre / சாந்தாராம் இராஜாராம் வணகுத்ரே நவம்பர் 18, 1901 – அக்டோபர் 30, 1990) இந்தியத் திரைப்பட்ட இயக்குநர், தயாரிப்பாளரும் நடிகருமாவார்[2]. 'ஜனக் ஜனக் பாயல் பாஜே' என்ற இந்தியாவின் முதல் டெக்னிக் கலர் படத்தை இயக்கியவர் இவர். பிறப்பு மற்றும் திருமணம்மராட்டிய மாநிலத்தில் உள்ள கோலாப்பூரில் 1901இல் பிறந்தார். இவரின் முதல் மனைவி நடிகை ஜெயஸ்ரீ. பின் அவருடன் மனக்கசப்பு ஏற்படவே அவர்களின் திருமண வாழ்வு முடிவுக்கு வந்தது. பின் ஜனக் ஜனக் பாயல் பாஜே திரைப்படத்தின் கதாநாயகி சந்தியாவை மறுமணம் செய்துகொண்டார். இவரது மகள் ராஜ்யஸ்ரீ. இவரும் மிக பெரிய நடிகை. காதல் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டுக்குச் சென்று விட்டார். வெற்றிப் படங்கள்கோட்னீஸ் என்ற படம் இவருக்கு பேரும் புகழும் சம்பாதித்து கொடுத்தது. இதில் இவர் கதாநாயகனாகவும் நடித்தார். பின் சாந்தாராமுக்கு அகில இந்திய அளவில் புகழை சேர்த்த படங்கள் பர்சாயின், ஆத்மி, சகுந்தலா, தஹேஜ், படோசி, சந்திரசேனா, அமிர்தமந்தன் போன்ற படங்களாகும். 'தோ ஆங்கேன் பாரஹாத்' எனும் இந்தி படம் பல விருதுகளை இவருக்கு வாங்கி தந்தது. 'தீன் பத்தி சார் ரஸ்தா' என்ற இவரது படம் பெரும் வெற்றி கண்டது.[3] விருதுகளும், சிறப்புகளும்
இறப்புஅக்டோபர் 30, 1990 இல் மும்பையில் இறந்தார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia