சு. முருகையன்
![]() சு. முருகையன் முதலியார் (S. Murugaiyan) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். ஒருங்கிணைந்த வடாற்காடு மாவட்டம் திருப்பத்தூரில் சுப்ரமணியன் வள்ளியம்மாள் இணையருக்கு மூன்றாவது பிள்ளையாக முருகையன் பிறந்தார். சண்முகம், விசாலாட்சி இருவரும் இவருக்கு மூத்தவர்களாவர். சிவகாமி, புனிதவதி என்ற இருவரும் முருகையனுக்கு இளையவர்களாக குடும்பத்தில் பிறந்தனர். இளமைப் பருவம் மற்றும் கல்விஇவர் பிறந்த சிறிது காலத்திலே தாய் இயற்கையடைந்ததால் பாட்டியே இவரை வளர்த்தார். திருப்பத்தூர் நகராட்சி உயர்நிலை பள்ளியில் தனது பள்ளிப் பட்டிப்பை முடித்தார் தனது இளமைபருவத்தை திருப்பத்தூரிலேயே பெரிதும் கழித்தார். தமிழ் மட்டும் அல்லாமல் ஆங்கிலம் உருது இந்தி ஆகியமொழிகளையும் சரளமாக முருகையன் பேசுவார் அரசியல்பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, 1939 ஆம் ஆண்டு நீதிக் கட்சியில் முருகையன் சேர்ந்தார். பின்னர் 1944 ஆம் ஆண்டு பெரியாருடன் திராவிடக் கழகத்தில் இணைந்து, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுக் கருத்துக்களையும், சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் பரப்புவதில் முன்னின்று செயல்பட்டார். நீதிக்கட்சி பின்னாளில் திராவிட கழகமாக பெயர்மாற்றம் கொண்டபோதும் பகுத்தறிவு கொள்கையால் ஈர்க்கப்பட்டு முருகையன் இயங்கினார். திராவிட முன்னேற்ற கழகம் துவங்கப்பட்டதில் இருந்து கட்சியில் இயங்கியவர் பின்னர் 1993 ஆம் ஆண்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 1996 ஆம் ஆண்டு மீண்டும் திராவிட முன்னேற்ற கழகத்திற்குத் திரும்பினார். முருகையன் 1967, மற்றும் 1971 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், கலசப்பாக்கம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இவர் 1980 ஆண்டு திருப்பத்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து, நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] மேலும் இவர் திருவண்ணாமலை நகரத்தின் நகராட்சித் தலைவராகவும், இந்நகர செங்குந்தர் மகாஜன சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். வகித்த பொறுப்புகள்
தொண்டுகள்
இறுதிக்காலம்வயது முதுமையும் உடல் நல பாதிப்பும் ஏற்பட்டு முருகையன் தனது 83-ஆம் வயதில் 2003 ஆம் ஆண்டு இயற்கையடைந்தார். . மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia