சூப்பர் மாம் 2
சூப்பர் மாம் 2 என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் நவம்பர் 10, 2019 முதல் மார்ச்சு 8, 2020 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பான குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் கலந்து கொண்ட ஒரு பொழுதுபோக்கு குடும்ப விளையாட்டு போட்டி நிகழ்ச்சி ஆகும்.[1] இது 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியின் இரண்டாம் பருவம் ஆகும். இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளினி அர்ச்சனா மற்றும் அவரது மகள் சாரா இணைத்து தொகுத்து வழங்குகின்றார்கள்.[2][3]இந்த பருவத்தில் சின்னத்திரை பிரபலங்கள் அவரது குழந்தைகளுடன் கலந்துக்கொண்டனர். இதில் அம்மாவுக்கும் குழந்தைக்கும் பல்வேறு போட்டிகள் வைத்து, அதில் யார் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அவர்கள் தான் சூப்பர் மாம் என்ற பட்டம் வெல்லுவார். இந்த பருவத்தின் வெற்றியாளர் அகிலா மற்றும் அவரது மகள் தனவிருத்திகா, இரண்டாவது வெற்றியாளர் காயத்ரி மற்றும் அவரது மகன் தருண் ஆகும். போட்டியாளர்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia