சூரியப் பொருண்மைசூரியப் பொருண்மை அல்லது சூரியத் திணிவு (M☉) (Solar mass) என்பது வானியலில் ஒரு திணிவலகு (திணிவை அளக்கும் அலகு) ஆகும். சூரியப் பொருண்மை என்பது சூரியனின் திணிவுக்கு சமமான திணிவு ஆகும்.அதாவது 2 சூரியத் திணிவு என்று குறிப்பிட்டால் அது சூரியனைப் போல இரண்டு மடங்கு திணிவு உடையது என்பது பொருள். இதன் மூலம் மற்ற விண்மீன்கள், விண்மீன் பேரடைகள், நெபுலாகள் மற்றும் விண்மீன் கொத்துகள் போன்றவற்றின் திணிவு அல்லது நிறையை குறிப்பிடுகிறார்கள். மேலேயுள்ள சூரியப் பொருண்மை புவியை விட 332,946 மடங்கும், வியாழன் கோளை விட 1048 மடங்கும் பெரியது.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia