செக்கானூரணி

செக்கானூரணி (ஆங்கிலம்: Chekkanurani) என்பது தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், ஏ. கொக்குளம் ஊராட்சியில் உள்ள ஒரு கிராமம் ஆகும். செக்கானூரணி கிராமம், மதுரை - உசிலம்பட்டி நெடுஞ்சாலையில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கு மேற்கே 5 கி.மீ. தொலைவிலும், திருமங்கலத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், மதுரைக்கு மேற்கே 17.5 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 625 514 ஆகும். இது திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கும், விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 193 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள செக்கானூரணி பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் 9°56′28″N 77°58′18″E / 9.941100°N 77.971600°E / 9.941100; 77.971600 ஆகும்.[1]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya