விருதுநகர் மக்களவைத் தொகுதி (Virudhunagar Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 34-ஆவது தொகுதி ஆகும். திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் மதுரை மாவட்டத்தில் உள்ளன. மற்ற நான்கும் விருதுநகர் மாவட்டத் தொகுதிகள் ஆகும்.
தொகுதி மறுசீரமைப்பு
தொகுதி மறுசீரமைப்பு காரணமாக சிவகாசி மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு அதற்குப் பதில் விருதுநகர் தொகுதி உருவாக்கப்பட்டது. சிவகாசி மக்களவைத் தொகுதியில் சாத்தூர், விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம் (தனி), கோவில்பட்டி ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன.
சட்டமன்றத் தொகுதிகள்
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:
- திருப்பரங்குன்றம்
- திருமங்கலம்
- சாத்தூர்
- சிவகாசி
- விருதுநகர்
- அருப்புக்கோட்டை
மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள்
18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
இத்தேர்தலில் காங்கிரசு வேட்பாளரான மாணிக்கம் தாகூர், தேமுதிக வேட்பாளரான அழகர்சாமியை 1,54,554 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர்
|
சின்னம்
|
கட்சி
|
தபால் வாக்குகள்
|
பெற்ற மொத்த வாக்குகள்
|
வாக்கு சதவீதம் (%)
|
மாணிக்கம் தாகூர்
|
|
காங்கிரசு
|
6,216
|
4,70,883
|
43.81%
|
அழகர்சாமி
|
|
தேமுதிக
|
1,274
|
3,16,329
|
29.43%
|
எஸ். பரமசிவ ஐயப்பன்
|
|
அமமுக
|
582
|
1,07,615
|
10.01%
|
வி. முனியசாமி
|
|
மக்கள் நீதி மய்யம்
|
314
|
57,129
|
5.32%
|
அருள்மொழிதேவன்
|
|
நாம் தமிழர் கட்சி
|
449
|
53,040
|
4.94%
|
நோட்டா
|
-
|
-
|
205
|
17,292
|
1.61%
|
16-ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
இத்தேர்தலில் அதிமுக வேட்பாளரான த. இராதாகிருஷ்ணன், மதிமுக வேட்பாளரான வைகோவை 1,45,551 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வாக்குப்பதிவு
2009 வாக்குப்பதிவு சதவீதம் [2]
|
2014 வாக்குப்பதிவு சதவீதம் [3]
|
வித்தியாசம்
|
77.38%
|
74.96%
|
↓ 2.42%
|
15-ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
16 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், காங்கிரசின் மாணிக்கம் தாகூர், மதிமுகவின் வைகோவை 15,764 வாக்குகள் வேறுபாட்டில் வென்று, விருதுநகர் மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார்.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்