செஞ்சிட்டாளே என் காதல
செஞ்சிட்டாளே என் காதல (Senjittale En Kadhala) என்பது 2017 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படமாகும். இப்படத்தை எழில்துரை எழுதி இயக்கியுள்ளார். மேலும் இபடத்தில் இவர் முதன்பைப் பாத்திரத்தை ஏற்று நடிக்க இவருக்கு ஜோடியாக மதுமிலா நடித்துள்ளார். மேலும் அபிநயா, மைம் கோபி உள்ளிட்டோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் தயாரிப்பானது 2016 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கி 7 ஏப்ரல் 2017 அன்று வெளியானது.[1] நடிகர்கள்
தயாரிப்புஏறக்குறைய ஐம்பது குறும்படங்களில் பணியாற்றிய பின்னர் தனது முதல் திரைப்படத்தை தயாரிக்க எழில்துரை முடிவு செய்தார். 2016 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தயாரிப்பு பணி தொடங்கியது, இந்த படம் குறித்து துவக்கத்தில் ஊடகங்களில் தவறான செய்தி வெளியானது. அதாவது இது சென்னையில் ஒரு இளம் தொழில்முறை கொலையாளியால் செய்யபட்ட கொலையை அடிப்படையாகக் கொண்டது என்பதாகும். இந்தக் கூற்றுக்களை மறுத்த எழில் இது ஒரு காதல் நகைச்சுவைத் திரைப்படம் என்றார். இப்படத்தில் இவருடன் இணைந்து நடிகைகள் மதுமிலா அபிநயா ஆகியோர் பணியாற்றினர்.[2] படத்தின் அசல் தமிழ் பதிப்பு முடிந்தவுடன் 100% பிரேக் அப் என இந்த படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.[3] தயாரிப்பாளர்கள் ஆரம்பத்தில் படத்தை காதலர் தினத்தை ஒட்டி வெளியிட இலக்கு வைத்தனர். ஆனால் அது ஒத்திவைக்கப்பட்டு ஏப்ரலில் வெளியிடப்பட்டது.[4] இசைஇப்படத்திற்கான இசையை ராஜ் பாரத் அமைத்தார். அதே நேரத்தில் படத்தின் இசை வெளியீட்டு உரிமையை வி. எம். எஸ் மியூசிக் ரெக்கார்ட்ஸ் வாங்கியது. இந்த படத்தின் இசை 31 சனவரி 2017 அன்று வெளியிடப்பட்டது. இதில் ஏழு பாடல்கள் இடம்பெற்றன.
வெளியீடுஇந்த படம் 7 ஏப்ரல் 2017 அன்று தமிழகம் முழுவதும் மணிரத்னத்தின் காற்று வெளியிடை படம் வெளியான சமயத்தில் வெளியானது. குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia