செத்தவரை

செத்தவரை
—  சிற்றூர்  —
செத்தவரை
அமைவிடம்: செத்தவரை, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°44′5″N 78°57′50″E / 11.73472°N 78.96389°E / 11.73472; 78.96389
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விழுப்புரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் எசு. சேக் அப்துல் இரகுமான், இ. ஆ. ப [3]
ஊராட்சி தலைவர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

செத்தவரை தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்தை சேர்ந்த ஒரு சிறிய கிராமம் ஆகும். 2011 கணக்கெடுப்பின்படி இங்குள்ள மக்கள் தொகை எழுநூறு ஆகும்.[4] இந்த கிராமத்தின் முக்கியமான தொழில் விவசாயம் ஆகும்.

அமைவிடம்

செத்தவரை, விழுப்புரத்திற்கு வடமேற்கில் 40 கிலோமீட்டர் தொலைவிலும், திருவண்ணாமலைக்கு தென்கிழக்காக 20 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டின் மற்றொரு பாறை ஓவிய இடமான கிழ்வாலை செத்தவரையில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.

போக்குவரத்து

செஞ்சியில் இருந்து திருக்கோயிலூர் செல்லும் நகரப் பேருந்துகள் (பேருந்து எண்:15) செத்தவரை வழியாக செல்கின்றன.

கிராமத்தை பற்றி

செத்தவரை 3000 ஆண்டுகள் பழமையான வரலாறை உடையது. இந்த கிராமத்தின் முக்கியத்துவம், இங்கு காணப்படும் கி. மு. 1000 சேர்ந்த பாறை ஓவியங்களின் மூலம் அறியப்படுகிறது. செத்தவரை பாறை ஓவியங்களில், பெரும்பாலும் விலங்கினங்களே அதிகம் காணப்படுகின்றன.

பாறை ஓவியங்கள்

உலகம் முழுதும், தொல்லியலில், பாறை ஓவியங்கள் குறித்து அதிகமான ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. தொல்லியல் நிபுணர்கள், பாறை ஓவியங்களை வரைந்த மக்களின் கலை நுணுக்கத்தை குறிப்பிடுவதோடு, அது, அவர்களின் நம்பிக்கைகளையும், தினசரி நடவடிக்கைகளையும் குறிக்கிறது என்றும் கூறுகிறார்கள். பாறை இருப்பிடங்களில் காணப்படும் ஓவியங்களில் பெரும்பாலும், வேட்டை காட்சிகளும், மனித நடவடிக்கைகளும் இடம் பெற்றிருக்கின்றன[5].

செத்தவரை பாறை ஓவியங்கள்

மான் ஓவியம்

இங்குள்ள அய்யனார்மலை என்னும் குன்றில், பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. மான், காட்டுப்பன்றி, மீன், புலி, மாடு போன்ற விலங்கு ஓவியங்களும், விரல்களுடன் கூடிய மனித உள்ளங்கை ஓவியங்களும் காணப்படுகின்றன. இவற்றில், மான் ஓவியமும், மீன் ஓவியமும், பெரிய அளவில் வரையப்பட்டுள்ளன. இவ்வோவியங்களின் எல்லை கோடுகள் சிவப்பு வண்ணத்தாலும், உட்புறம் வெள்ளை நிறத்தாலும் வரையப்பட்டுள்ளது. மாட்டு ஓவியம் முழுவதும் சிவப்பு வண்ணத்தால் வரையப்பட்டுள்ளது. மாட்டின் உள் உறுப்புகளும் தெரியுமாறு வரையப்பட்டுள்ளது. இம்மாதிரி உடல் உள் உறுப்புகள் தெரியுமாறு வரையப்படும் ஓவியங்களை, X - கதிர் ஓவியங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

மான் ஓவியத்திற்கு அருகில், ஒரு தடியில் இறைச்சியை தீயில் வறுப்பது போன்று வரையப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த ஓவியத்தை வரைந்தவர்களுக்கு, வறுக்கப்பட்ட இறைச்சியை உண்ணும் பழக்கம் இருந்ததை அறிய முடிகிறது.

ஓவியங்கள் வரையப்பட்ட முறையை வைத்து பார்க்கும் போது, செத்தவரை பாறை ஓவியங்களின் காலம் கி மு 1500 ஆகும்[6].

படங்கள்

உசாத்துணைகள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. http://www.indiamapped.com/tamil-nadu/viluppuram/gingee/settavarai/
  5. S. Vasanthi, "KALVETTU", Vol no:75, page no:40 (2008), State department of Archaeology, Chennai
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-12-27. Retrieved 2012-05-01.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya