சென்சென்
சென்சென் (Shenzhen) ஆங்காங்கிற்கு உடனடி வடக்கே சீனாவின் தென்பகுதியில் குவாங்டங் மாகாணத்தில் அமைந்துள்ள ஓர் முதன்மை நகரமாகும். சென்சென் சீனாவின் முதல் சிறப்பு பொருண்மிய வலயமாகவும் மிகுந்த வெற்றியடைந்த திட்டமாகவும் விளங்குகின்றது. உள்ளாட்சி நிர்வாகத்தில் தற்போது ஓர் மாகாணத்தை விட சற்றே அதிகாரம் குறைந்த துணை மாகாண நிலை பெற்று விளங்குகின்றது. சென்சென்னின் புதுமையான மற்றும் நவீன நகர்த்தோற்றத்திற்கு துடிப்பான பொருளாதாரமும் விரைவான வெளிநாட்டு முதலீடுகளும் காரணமாயிற்று. இது 1970களில் சீனா தனது கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்தி சிறப்பு பொருண்மிய வலயங்களில் "சீர்திருத்த பொருளாதார, திறந்த நிர்வாக" அமைப்பை ஏற்படுத்தியதால் நிகழ்ந்தது. இவற்றிற்கு முன்னர் சென்ச்சென் ஓர் சிற்றூராக இருந்தது. எழுபதுகளின் பிந்தைய காலங்களில் சீன மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பெருமளவில் முதலீடு செய்துள்ளனர். US$30 பில்லியனுக்கு மேலாக தயாரிப்பு தொழிலகங்களில் முழுமையும் வெளிநாட்டு உரிமை உடைய நிறுவனங்களும் சீன நிறுவனங்களுடன் இணைந்த வெளிநாட்டு முதலீடுகளும் ஈடுபட்டுள்ளன. தற்போது கூடுதலாக சேவைத்துறையிலும் முதலீடுகள் மிகுந்து வருகின்றன. உலகின் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக சென்சென் விளங்குகின்றது.[2] தெற்கு சீனாவின் முதன்மை நிதி மையமாக விளங்குவதால் சென்சென்னில் பங்குச் சந்தையும் பல நிறுவனங்களின் தலைமையகமும் உள்ளன. சென்சென் மூன்றாவது நெருக்கம் மிகுந்த கொள்கலன் துறைமுகமாகவும் விளங்குகின்றது. மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்![]() விக்கிப்பயணத்தில் சென்சென் என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது. |
Portal di Ensiklopedia Dunia