மேலே இருந்து கடிகார வரிசையில்: முகமது அலி ஜின்னாவின் துருக்கர் கல்லறை
, ஃப்ரீ ஹால், சுண்டிகர் சாலை, பிரித்தானிய காலனிய கால கராச்சி கோட்டைக் கருவூலக் கட்டடம், மொஹட்டா அரண்மனை, கராச்சி கோட்டை
அடைபெயர்(கள்): கியாத் நகரம்,[1] ஆசியாவின் பாரிசு,[2][3] விளக்குகள் நகரம்,[2] நகரங்களின் மணமகள்[4] (عروس البلاد[5])
கராச்சி (Karachi, IPA: [kəˈrɑːˌtʃi](listen)) பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமும் மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமும்,[13]சிந்த் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். மேலும் இது உலகில் இரண்டாவது மிகுதியான மக்கள் தொகை கொண்ட நகரமாக உள்ளது. உலக அளவில் நகர மக்கள்தொகை தரவரிசையில், இது உலகில் 12 வது மிகப்பெரிய நகரமாகும் . இது ஒரு உலகளாவிய நகரமாக (குலோபல் சிட்டி) கருதப்படுகிறது.[14][15] 1958க்கு முன்பு வரை இதுவே பாகிஸ்தானின் தலைநகராக இருந்தது. பாகிஸ்தானின் முதன்மையான தொழில் நகராகவும், வணிக தலைநகரமாகவும் உள்ளது.[16] கராச்சி பாக்கிஸ்தானின் பெரிய பல்வள இயைபு நகரமும் ஆகும்.[17]அரபிக் கடலோரத்தில் அமைந்துள்ள கராச்சி ஒரு முக்கிய போக்குவரத்து மையமாக விளங்குகிறது, பாகிஸ்தானின் இரண்டு மிகப்பெரிய துறைமுகங்களான, கராச்சி துறைமுகமும், பிங் காசிம் துறைமுகத்தையும் இந்நகரம் கொண்டுள்ளது. மேலும் பாகிஸ்தானின் பரபரப்பான வானூர்தி நிலையமாகுமான ஜின்னா பன்னாட்டு வானூர்தி நிலையம் இங்கே உள்ளது.
கராச்சியின் சுற்றுப்புறங்களில் மக்கள் ஆயிரம் ஆண்டுகளாக வசித்து வந்தாலும்,[18] இது கோலாச்சி[19] என்ற கிராமமாக 1729 ஆம் ஆண்டில் இந்த நகரம் அமைக்கப்பட்டது.[20] இந்த குடியிருப்பானது, பிரித்தானிய காலனித்துவவாதிகளின் வருகையைக்குப் பின்னர் பெருமளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆனது. பிரித்தானியர் இந்த நகரத்தை ஒரு முக்கிய துறைமுகமாக மாற்றியமைப்பதற்கான முக்கிய பணிகளை மேற்கொண்டது மட்டுமல்லாமல், அவர்களின் விரிவான தொடர்வண்டி வலைப்பின்னலுடன் இணைத்தனர்.[19]இந்தியப் பிரிவினை காலகட்டத்தில், சிந்து மாகாணத்தில் 400,000 மக்கள் தொகை கொண்ட மிகப்பெரிய நகரமாக ஆனது.[17] பாக்கிஸ்தானின் சுதந்திரத்தைத் தொடர்ந்த்து உடனடியாக, இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான முஸ்லீம் குடியேறிகளின் வருகையுடன் நகரின் மக்கள் தொகை பெருமளவில் அதிகரித்தது,[21] 1950 கள் மற்றும் 1960 களில் இந்திய முஸ்லீம் குடியேறிகளின் முதன்மை இலக்காக கராச்சி இருந்தது.[22] பாக்கித்தானின் விடுதலைக்குப் பின் இந்த நகரம் விரைவான பொருளாதார வளர்ச்சியைக் கண்டது, பாக்கிஸ்தான் மற்றும் தெற்காசிய நாடுகளில் இருந்து இடம்பெயர்பவர்களை இது பெருமளவில் ஈர்த்தது.[23]
கராச்சி பாகிஸ்தானின் மிகவும் மதச்சார்பற்ற மற்றும் சமூக தாராளவாத நகரங்களில் ஒன்றாகும்.[24][25][26] இது பாக்கிஸ்தானில் மொழியியலில், இனவியலில், சமயவியலில் என பல்வேறு வகைகளில் மிகவும் மாறுபட்ட நகரமாகும்.[17] 15 மற்றும் 23.5 மில்லியன் மக்களுக்கு இடைப்பட்ட மக்கள் தொகை கொண்ட பல்வள இயைபு பிராந்தியத்தில்,[8][27] முஸ்லீம் உலகில் கராச்சி மிகப்பெரிய நகரமாகக் கருதப்படுகிறது,[28] உலகின் 7 வது மிக அதிக மக்கள்தொகை கொண்ட நகர்ப்புற ஒருங்கிணைப்பாகவும் இது உள்ளது.[29][30] கராச்சி உலகின் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகும்.[31] மேலும் பாக்கிஸ்தானின் ஒவ்வொரு இன குழுவினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகங்கள் கிட்டத்தட்ட உள்ளன. கராச்சியில் 2 மில்லியனுக்கும் அதிகமான வங்கதேச குடியேறியவர்கள், 1 மில்லியன் ஆப்கானிய அகதிகள், மியான்மர் நாட்டிலிருந்து வந்த 400,000 ரோகிஞ்சா மக்கள் உள்ளனர்.[32][33][34]
கராச்சி இப்போது பாகிஸ்தானின் முதன்மை தொழில் மற்றும் பொருளாதார மையமாக உள்ளது. 2014 ஆம் ஆண்டிற்குள், இதன் முறையான பொருளாதாரம் 113 பில்லியன் டாலர் மதிப்புள்ளதாக மதிப்பிடப்படுகிறது.[35] கராச்சி பாகிஸ்தானின் வரி வருவாயில் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் அளிக்கிறது,[36] மேலும் பாக்கிஸ்தான் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 20% பங்களிக்கிறது.[37][38] பாக்கிஸ்தானிய தொழில்துறை உற்பத்தியில் கராச்சியில் இருந்து ஏறத்தாழ 30% நடக்கிறது,[39] கராச்சியின் துறைமுகங்கள் பாக்கிஸ்தானின் வெளிநாட்டு வர்த்தகத்தில் சுமார் 95% ஐ கையள்கின்றன.[40] பாகிஸ்தானில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களில் 90% கராச்சியை தலைமையிடமாக கொண்டு உள்ளன.[40] கராச்சி தொழிலாளர்களில் 70% வரை அமைப்பு சாரா தொழிலாளர்கள்,[41] இது பொதுவாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கணக்கில் சேர்க்கப்படுவதில்லை.[42]
விபத்து
செப்படம்பர் 12, 2012 அன்று கராச்சி நகரின் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி குறைந்தது 250 பேர் உயிரிழந்தனர்.[43] இது மேலும் அதிகரிக்கும் என காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.[44]
↑"PIGJE". pigje.com.pk. Archived from the original on 30 செப்டம்பர் 2014. Retrieved 25 February 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
↑"Chronology for Biharis in Bangladesh". Center for International Development and Conflict Management, University of Maryland. 10 January 2007. Archived from the original on 2 June 2010. Retrieved 6 May 2010.
↑Centre for Risk Studies at the University of Cambridge Judge Business School. "Karachi factsheet: Lloyd's City Risk Index". Lloyd's City Risk Index 2015–2025. Lloyd's. Archived from the original on 24 நவம்பர் 2016. Retrieved 23 November 2016. {{cite web}}: |author1= has generic name (help)