சென்னை 2 சிங்கப்பூர்சென்னை 2 சிங்கப்பூர் (Chennai 2 Singapore) என்பது 2017 இல் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். அப்பாஸ் அக்பர் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். கோகுல் ஆனந்த், ராஜேஷ் பாலச்சந்திரன், அஞ்சு குரியன், சிவ் கேசவ், எம்சீ ஜெஸ் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.[1] இந்தத் திரைப்படத்தை ஜிப்ரான், வ்ரோபல் மற்றும் எம் எம் 2 நிறுவனத்துடன் இணைந்து சிங்கப்பூர் ஊடக முன்னேற்ற ஆனையமும் தயாரித்துள்ளது. சிங்கப்பூர் மற்றும் தமிழகத் திரைப்படத்துறை ஆகிய இரு திரைப்படத்துறைகளும் ஒரு திரைப்படத்தில் இணைந்து பணிபுரிவது இதுவே முதல்முறை ஆகும்.[2][3] கதைச் சுருக்கம்இந்தக் கதையின் நாயகன் ஹரிஷ் எப்படியாவது இயக்குநர் ஆகவேண்டும் என்ற லட்சியத்துடன் வாழ்பவன். அப்போது தனது கனவுப் படத்திற்கு முதலீடு செய்பவர்களைத் தேடி அவன் சிங்கப்பூர் செல்கிறான். ஆனால் அவனுடைய தொடர் துரதிருஷ்டத்தினால் அந்தக் காரியங்கள் கைகூடவில்லை . மேலும் அவனுடைய கடவுச் சீட்டும் தொலைந்துவிடுகிறது. பின் ஒரு நாள் வானம்பாடி எனும் சிங்கப்பூரில் வாழும் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளரைச் சந்திக்கிறான். அவருடைய ஆலோசனைகளாலும் , உதவியாலும் தனது கனவு மற்றும் லட்சியம் என்ன என்பதனை உணருகிறான். பின் ஒரு நாள் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு இறக்கும் தருவாயிலிருக்கக்கூடிய ஒரு பெண்ணைப் பார்க்கிறான். இந்தியத் திரைப்படங்களில் பெரும்பாலும் இருக்கக்கூடிய மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் இல்லாமல் வாழ்க்கை, இறப்பு என்பதைப் பற்றிய ஒரு பயணமாக இந்தப் படம் உள்ளது.[4] கதை மாந்தர்கள்
ஒலி வரிஇசையமைப்பாளர் முகமது ஜிப்ரான் தன்னுடைய சமூக ஊடகப் பக்கத்தில் இந்தப்படத்தின் ஒலிவரியானது தனித்துவமான முறையில் வெளியிடப்படும் எனத் தெரிவித்திருந்தார். இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் இயக்குநர் அக்பர் அப்பாஸ் சென்னை முதல் சிங்கப்பூர் வரை பயணம் செய்யவும் ஒவ்வொரு பாடல்களையும் ஒவ்வொரு எல்லைகளான பூடான், மியான்மர், தாய்லாந்து, மலேசியா போன்ற இடங்களில் வெளியிடவும் திட்டமிட்டுருந்தனர்.[5] மேலும் ஜிப்ரான் இந்த சாலைப் பயணம் குறித்து தனது நண்பர்களிடம் சமூக வலைத் தளங்களின் மூலமாக ஆலோசனைகள் கேட்டார். அஜித் குமார் அவர்களிடமும் ஆலோசனை கேட்டிருந்தார்.[6][7] ஆகஸ்டு 2016 இல் சத்தியம் சினிமா (சென்னையில்) வைத்து சூர்யா (நடிகர்) ஒலிவரியை வெளியிட்டார். இந்தத் திரைப்படத்தின் முதல் பாடலான வாடி வாடி , சென்னையில் வைத்து வெளியிடப்பட்டது. ரேடியோ மிர்ச்சி வானொலியில் இந்தப் பாடல் வெளியான ஒரு வாரத்தில் முதல் இடம் பிடித்தது. மற்றும் சூரியன் வானொலி, பிக் வானொலி, ரேடியோ சிட்டி போன்ற வானொலி ஒலிபரப்புகளில் இந்தப் பாடல் முதலிடம் பிடித்தது. இந்தத் திரைப்படத்தின் முழுமையான பாடல்தொகுப்பும் ஐ-டியூன்ஸ் இல் முதலிடம் பிடித்தது. ஐ-டியூன்ஸ் வாடி வாடி எனும் பாடலை செப்டம்பர் மாதத்தின் ஒரு வாரத்தில் இந்தப் பாடலை சிறந்த பாடலாக அறிவித்தது.[8]
தயாரிப்பு2011 ஆம் ஆண்டில் இந்தத் திரைப்படத்திற்கான கதையுடன் இயக்குநர் அப்பாஸ் அக்பர் வெங்கட் பிரபுவைச் சந்தித்து இந்தத் திரைப்படத்திற்கு நிருவாகத் தயாரிப்பாளராக வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். மேலும் அட்டகத்தி திரைப்படத்தில் நடித்த அட்டகத்தி தினேஷ் இந்தப் படத்தின் நாயகனாக நடிக்கப் பேச்சுவார்த்தை நடந்தது, ஆனால் அந்தச் சமயத்தில் அவர் வேறொரு படத்தில் நடித்து கொண்டிருந்தார்.[9] அடுத்ததாக மாதவனிடம் நடிக்கக் கேட்டனர். ஆனால் அந்தச் சமயத்தில் அவர் இறுதிச்சுற்று படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.[9] இதனுடைய முதல்கட்டப் படப்பிடிப்பு செப்டம்பர் 2014 இல் முடிவடைந்தது. முழுமையாக 2016 இல் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு[9] டிசம்பர் 15, 2017 இல் இந்தியாவில் வெளியானது சான்றுகள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia