மாதவன்
ர. மாதவன் (R. Madhavan) (பிறப்பு: ஜூன் 1, 1970, ஜாம்ஷெட்பூர்) என்பவர் இந்தியத் தமிழ் திரைப்பட நடிகர், எழுத்தாளர், படத்தயாரிப்பாளர் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆவார். இவர் தமிழ் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மற்றும் நான்கு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளையும் மூன்று தமிழக அரசு திரைப்பட விருதுகள்|தமிழக அரசு திரைப்பட விருதுகள்|தமிழக அரசு திரைப்பட விருதுகளையும் வென்றுள்ளார்.[3][4] இவர் 2000ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கிய மின்னலே என்ற திரைப்படத்திலும் மற்றும் டும் டும் டும் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து கன்னத்தில் முத்தமிட்டால் (2002), ரன் (2002), அன்பே சிவம் (2003), ஆய்த எழுத்து (2004), இறுதிச்சுற்று (2016), விக்ரம் வேதா (2017) போன்ற பல தமிழ்த் திரைப்படங்களிலும் ரங் தெ பசந்தி (2006), குரு (2007), 3 இடியட்சு (2009) போன்ற இந்தித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் . ஆரம்ப கால வாழ்க்கைரங்கநாதன் மாதவன் 1 ஜூன் 1970 ஆம் ஆண்டு ஜம்சேத்பூர் (இப்போது சார்க்கண்ட்) இந்தியாவில் ஒரு தமிழ் பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை ரங்கநாதன் டாட்டா ஸ்டீல் நிர்வாக நிர்வாகியாகவும், இவரது தாயார் சரோஜா இந்தியாவின் வங்கியில் மேலாளராகவும் இருந்தார். இவரது தங்கை தேவிகா ஒரு மென்பொருள் பொறியாளர் ஆவார்.[5] நடிப்புத்துறைஇவர் முதலில் இந்தித் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். இவர் தனது நடிப்பை 'பனேகி அப்னி பாத்' என்னும் தொலைக்காட்சித் தொடர் மூலம் ஆரம்பித்தார். அதைத் தொடர்ந்து 1997 ஆம் ஆண்டு 'இண்பெர்னோ' என்ற ஆங்கிலத் திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நடித்த திரைப்படங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia