செம்பனார்கோயில் எஸ். ஆர். டி. வைத்தியநாதன்

எஸ். ஆர். டி. வைத்தியநாதன்
S. R. D. Vaidyanathan
பின்னணித் தகவல்கள்
பிறப்புமார்ச்சு 15, 1929 (1929-03-15) (அகவை 96)
மயிலாடுதுறை, தஞ்சாவூர்
இறப்பு(2013-11-18)நவம்பர் 18, 2013
இசைக்கருவி(கள்)நாதசுவரம்

செம்பனார்கோயில் எஸ். ஆர். டி. வைத்தியநாதன் (S. R. D. Vaidyanathan) (15 மார்ச் 1929 - 18 நவம்பர் 2013)[1] தமிழகத்தைச் சேர்ந்த நாதசுவர இசைக் கலைஞர் ஆவார்.

ஆரம்ப கால வாழ்க்கை

தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில், மயிலாடுதுறையில் பிறந்தவராகிய வைத்தியநாதன், செம்பனார் கோயில் எனும் ஊரினைச் சேர்ந்த இசைக் குடும்பத்தின் வழிவந்தவர். இவரின் தாத்தா இராமசாமிப் பிள்ளையின் இசையினை இசு மாசுட்டர் வாய்சு எனும் நிறுவனம் ஒலிப்பதிவு செய்தது. இவரின் தந்தை தக்சிணா மூர்த்தியின் இசையினை கொலம்பியா நிறுவனம் ஒலிப்பதிவு செய்தது.

நாதசுர இசையினை மாயவரம் ராமைய்யா பிள்ளையிடமும், வாய்ப்பாட்டினை விழுந்தூர் ஏ. கே. கணேச பிள்ளை, மதுரை மணி ஐயர் ஆகியோரிடமும் கற்றார்.

தொழில் வாழ்க்கை

தர்மபுரம் ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம் எனும் அமைப்புகளால் ஆதீன வித்துவானாக அங்கீகரிக்கப்பட்டவர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ரீடராகவும், சென்னை தமிழ் இசைச் சங்கத்தில் ஓய்வுப்பெற்ற ரீடராகவும் பணிபுரிந்தவர்.

பெற்றுள்ள விருதுகளும் பட்டங்களும்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya