செயின்ட் ஜார்ஜ் கத்தீட்ரல் (சென்னை)
![]() புனித ஜார்ஜ் கோவில் (St. George’s Cathedral) என்பது முன்னாள் ஆங்கிலிக்கன் சபை, இந்நாள் தென்னிந்தியத் திருச்சபையின் சென்னை மறைமாவட்ட முதன்மைக் கோவில் ஆகும். இக்கோவில் 1815ஆம் ஆண்டு கட்டப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம்இக்கோவிலின் வரலாறு சென்னை நகரோடும் இந்தியாவோடும் இணைந்த கிறித்தவ வரலாற்றோடு நெருங்கிய தொடர்புடையது. ஆங்கிலிக்கன் சபை, மெதடிஸ்டு சபை, பிரெஸ்பிட்டேரியன் சபை மற்றும் கான்ங்ரகேஷனல் சபைகள் ஒன்றிணைந்து தென்னிந்தியத் திருச்சபை என்னும் ஒன்றிப்புச் சபை இக்கோவிலில்தான் 1947, செப்டம்பர் மாதம் தொடங்கியது. அப்போது நடந்த நிகழ்ச்சியில் இக்கோவில் நிரம்பி வழிந்ததோடு, வெளியே எழுப்பப்பட்ட பந்தலில் 2000க்கும் மேற்பட்ட மக்கள் குழுமியிருந்தனர். உலக அளவிலேயே பல திருச்சபைகள் ஒன்றிணைந்து ஒன்றிப்பு முயற்சியைத் தொடர இந்தத் திருச்சபை ஒன்றிப்பு வழிகோலியது. கட்டடத்தின் சிறப்புகள்புனித ஜார்ஜ் கோவிலின் கோபுரம், தூண்கள், பளிங்குச் சிலைகள், சுவர் ஓவியங்கள், நினைவுக் கல்லறைகள் போன்றவை அதற்குச் சிறப்பாக அமைந்துள்ளன. பரந்து விரிந்த ஒரு படிக்கட்டில் ஏறி, கோவிலுக்குள் நுழையலாம். தலைசிறந்த கலையழகோடும் கட்டட நுணுக்கத்தோடும் அமைந்த இக்கோவிலில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் பிரித்தானிய காலத்தில் ஆட்சி செய்த ஆளுஞர்கள் தம் குடும்பத்தோடு வழிபாட்டில் பங்கேற்றனர். அதுபோலவே, அரசுப் பதிலாள்கள் (Viceroys) சென்னைக்கு வருகைதந்த போது அங்கு வழிபட்டனர். ![]() கோவில் வரலாறு![]() இக்கோவில் 1815ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. கட்டடத்தை எழுப்ப மக்களே நிதி உதவி அளித்தார்களாம்.[1] இதைக் கட்டிமுடிக்க அக்காலத்தில் 41,709 பொற்காசுகள் (பகோடாக்கள் - pagodas) செலவாயின. கோவிலின் உள்ளே செய்யப்பட்ட மரவேலைகள், குழலிசைக் கூடம் (pipe organ), கட்டடக் கலைஞருக்கு அளிக்கப்பட்ட ஊக்கவூதியம் ஆகியவற்றைக் கணக்கிட்டால் மொத்த செலவு 57,225 பொற்காசுகள். ஒரு பொற்காசு (பகோடா) இந்திய ரூபாய் மதிப்பில் 3.50 என்று கணக்கிடப்படுகிறது. பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் மூத்த கட்டடக் கலைஞர் கர்னல் J. L. கால்டுவெல் (Col. J. L. Caldwell) கோவில் கட்டடத்தின் முன்வரைவை ஆக்கினார். துணைக் கட்டடக் கலைஞர் தே ஹாவில்லாண்ட் (Captain De Havilland) கோவில் கட்டடத்தை நிறைவுக்குக் கொணர்ந்தார். இவரே சென்னையில் அமைந்த மற்றொரு புகழ்மிக்க வழிபாட்டுத் தலமாகிய புனித அந்திரேயா கோவிலையும் கட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கோவில் வசதியாக அமைந்திருக்கும் இடம் சத்திரப் பாக்கம் (Choultry Plain) என்று அழைக்கப்பட்டது. பிரித்தானியர் அக்கோவிலில் 1815இலிருந்தே வழிபட்டாலும், 1816, சனவரி 6ஆம் நாளில்தான் கல்கத்தாவின் முதல் ஆங்கிலிக்க பேராயர் மேதகு தாமஸ் ஃபேன்ஷா மிட்டில்டன் (Rt. Rev. Thomas Fanshaw Middleton) அக்கோவிலை "இங்கிலாந்து திருச்சபையின் மரபுக்கு ஏற்ப இறைபணி நிகழ்த்த" அர்ச்சித்தார்.[1] ![]() படத் தொகுப்பு
கோவில் வடிவமைப்பு![]() ![]() சென்னை ஆங்கிலிக்க/தென்னிந்தியத் திருச்சபை பேராயர்கள்
புனித ஜார்ஜ் கோவில் தலைமைப் பாதிரிமார்
படத் தொகுப்பு
குறிப்புகள்
ஆதாரங்கள்வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia