செரமைடு![]() ![]() செரமைடுகள் (Ceramides) கொழுமிய மூலக்கூறுகளின் குடும்பத்தைச் சேர்ந்தவையாகும். ஒரு செரமைடு மூலக்கூறில் இஸ்பிங்கோசினும், கொழுப்பு அமிலமும் உள்ளன[1]. செல் சவ்வுகளில் செரமைடுகள் அதிகச் செறிவுடன் காணப்படுகின்றன. செரமைடுகள் இஸ்பிங்கோமயலினின் கொழுமிய பாகங்களுள் ஒன்றாகும். கொழுமிய ஈரடுக்குகளில் உள்ள பெரும்பாலான கொழுமியங்களுள் ஒன்றான இஸ்பிங்கோமயலினின் கொழுமிய பாகங்களுள் ஒன்றாக செரமைடு விளங்குகிறது. பல வருடங்களாக, கொழுமிய ஈரடுக்குகளில் உள்ள செரமைடுகளும், பிற இஸ்பிங்கோகொழுமியங்களும் வடிவ மூலகங்களாகவேக் கருதப்பட்டு வந்தன. ஆனால் இது தற்போது முழுவதும் உண்மையில்லை என்று அறியப்பட்டுள்ளது. செரமைடுகள் உண்மையில் கொழுமிய சமிக்ஞை மூலக்கூறுகளாக செயலாற்றக் கூடியவை. செரமைடுகளின் நன்கு அறியப்பட்ட சமிக்ஞை மூலக்கூறு பணிகளுக்கான உதாரணங்கள்: செல் பெருக்கம், செல் வேறுபடல் மற்றும் கட்டளைக்குட்பட்ட செல் இறப்பு. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia