நிறைவுறாக் கொழுப்பு (unsaturated fat) என்பது கொழுப்பு அமிலத் தொடரியில் குறைந்தபட்சம் ஒரு இரட்டைப்பிணைப்பினைக் கொண்ட கொழுப்பு அல்லது கொழுப்பு அமிலத்தினைக் குறிக்கும். கொழுப்பு மூலக்கூறில், ஒரு இரட்டைப்பிணைப்பு இருந்தால் அதை ஒற்றைநிறைவுறாக் கொழுப்பு என்றும், ஒன்றுக்கு மேற்பட்ட இரட்டைப்பிணைப்பினைக் கொண்டவை பல்நிறைவுறாக் கொழுப்பு என்றும் அழைக்கப்படுகின்றன. இரட்டைப்பிணைப்புகள் உருவாகும் இடங்களில், ஹைட்ரசன்அணுக்கள் நீக்கப்படுகின்றன. இதனால், நிறைவுற்ற கொழுப்பில் இரட்டைப்பிணைப்புகள் கிடையாது. இவற்றில், அதிகப் பட்ச எண்ணிக்கையில் ஹைட்ரசன்கள்கார்பனுடன் பிணைந்திருக்கும் என்பதால் இவை, ஹைட்ரசன் அணுக்களுடன் நிறைவுற்றவை எனப்படுகின்றது. உயிரணுவளர்சிதைமாற்றத்தில் நிறைவுறாக் கொழுப்பு மூலக்கூறுகள், அதே அளவு நிறைவுற்ற கொழுப்புடன் ஒப்பிடும்போது, குறைந்த அளவு சக்தியினைக் (குறைந்த கலோரிகளை) கொண்டுள்ளன. பெருமளவு நிறைவுறா தன்மையினைக் கொண்டிருக்கும் ஒரு கொழுப்பு அமிலமானது (அதாவது அதிகமான இரட்டைப்பிணைப்புகளைக் கொண்ட கொழுப்பு அமிலம்) அதிக அளவு கொழுமியபெராக்சைடேற்ற தாக்கத்திற்கு உட்படுகின்றது (சிக்கடித்துப் போகிறது). நிறைவுறாக் கொழுப்புகளை எதிர்உயிர்வளிகள் கொழுமியபெராக்சைடேற்றதிலிருந்து (கெட்டுப்போவதிலிருந்து) பாதுகாக்கின்றன.