செரிலிங்கம்பள்ளி
செரிலிங்கம்பள்ளி (Serilingampally) இலிங்கம்பள்ளி எனவும் அழைக்கப்படும் இது இந்திய மாநிலமான தெலங்காணாவின் ஐதராபாத்து நகரத்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கிய புறநகர்ப் பகுதி ஆகும். இது ரங்காரெட்டி மாவட்டத்தில் செரிலிங்கம்பள்ளி வட்டத்தின் தலைமையகம் ஆகும்.[1][2] இதை பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி நிர்வகிக்கிறது. ஐதராபாத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் ஆலோசனை நகரம் (ஹைடெக் சிட்டி), கச்சிபௌலி, நானகிராம்குடா, மணிகொண்டா, கோந்தாபூர் ஆகியவற்றுடன் அதன் அருகாமையில் இருப்பதால், அதிக எண்ணிக்கையிலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இங்கு அமைந்துள்ளன.[3] ஐதராபாத்து பல்கலைக்கழகமும் இங்கு அமைந்துள்ளது. புள்ளிவிவரங்கள்2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, செரிலிங்கம்பள்ளியில் 32,642 வீடுகளைக் கொண்ட 153,364 மக்கள் தொகை இருந்தது. இந்த மக்கள் தொகையில் 79,225 ஆண்களும் 74,139 பெண்களும் உள்ளனர்.[4] 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இதன் சராசரி கல்வியறிவு விகிதம் 42% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விடக் குறைவு: ஆண் கல்வியறிவு 42%, பெண் கல்வியறிவு 41% ஆகும். இதன் மக்கள் தொகையில் 11% 6 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கின்றனர் .[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia