ஐதராபாத்து பல்கலைக்கழகம்17°27′36″N 78°19′55″E / 17.4599791°N 78.3320099°E
ஐதராபாத்து பல்கலைக்கழகம் (University of Hyderabad,தெலுங்கு: హైదరాబాద్ విశ్వవిద్యాలయము; சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடி: ஹதராபாது விஸ்வவித்யாலயமு), அல்லது ஐதராபாத்து நடுவண் பல்கலைக்கழகம் (Hyderabad Central University) தெலுங்கானாவின் ஐதராபாத்தில் அமைந்துள்ள பொது ஆராய்ச்சி பல்கலைக்கழகமாகும். 1974இல் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம் பெரும்பாலும் வளாகத்தில் தங்கி படிக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது; பல்வேறு துறைகளில் 400 ஆசிரியர்களும் 5,000 மாணவர்களும் இருக்கின்றனர்.[4] தெலுங்கானா மாநில ஆளுநர் பல்கலைக்கழகத்தின் பதவிசார் முதன்மை முகவராகவும் (ரெக்டர்) இந்தியக் குடியரசுத் தலைவர் பல்கலைக்கழகத்தின் வருநராகவும் (விசிட்டர்) உள்ளனர். தனித் தெலுங்கானா போராட்டத்தை அடுத்து 1973இல் ஏற்பட்ட உடன்பாட்டின் ஆறு-புள்ளி சூத்திரத்தின்படி இந்தப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளது. இதன் முதல் துணை வேந்தராக பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் கரிம வேதியியியலாளர் குர்பக்சு சிங் 1974 முதல் 1979 வரை பணியாற்றினார். இதன் முதல் வேந்தராக பி.டி. ஜட்டி பொறுப்பிலிருந்தார். ஐதராபாத்து பல்கலைக்கழகம் நாட்டின் முதன்மை கல்வி நிறுவனங்களில் ஒன்றாக, சவகர்லால் நேரு பல்கலைக்கழகம், தில்லி பல்கலைக்கழகம் மற்றும் இந்தியத் தொழினுட்பக் கழகங்களுக்கு இணையாக, கருதப்படுகின்றது. இந்தியாவின் முதல் பத்து பல்கலைக்கழகங்களில் ஒன்றாக, குறிப்பாக ஆராய்ச்சிக்கு, தொடர்ந்து மதிப்பிடப்பட்டு வருகின்றது. சனவரி 2015இல், இந்தியக் குடியரசுத் தலைவரால் சிறந்த நடுவண் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் வருநர் விருது ஐதராபாத்து பல்கலைக்கழகத்திற்கு கிடைத்துள்ளது.[5] இந்தப் பல்கலைக்கழகம் காச்சிபௌலியில் கிட்டத்தட்ட 2300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் தாவரவகைகளும் விலங்கினங்களும் மிகுந்துள்ளன; 734 வகை தாவரங்களும் பத்துவகை பாலூட்டிகளும் பதினைந்து வகை ஊர்வனவும்[6] 159 வகை பறவைகளும் உள்ளன.[7] மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia