ஒரு ஸ்லெங்க் குழாயில் புதிதாக வடிகட்டிய செருமேனியம் டெட்ராகுளோரைடு.
செருமேனியம் டெட்ராகுளோரைடு (Germanium tetrachloride) என்பது ஒரு நிறமற்ற, ஒரு விசித்திரமான, அமில வாசனையுடன் கூடிய திரவமாகும். சுத்திகரிக்கப்பட்ட செருமேனியம் உலோக உற்பத்தியில் இது ஒரு இடைநிலைப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அண்மைய ஆண்டுகளில், ஒளியிழை உற்பத்திக்கான காரணியாக GeCl4 பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது.
தயாரிப்பு
செருமேனியத்தின் பெரும்பாலான வணிகரீதியான உற்பத்தி துத்தநாகம் மற்றும் செப்பு-தாது ஊது உலைகளின் புகை-போக்கிகளின் தூசுக்களை வினைக்குட்படுத்தி தயாரிப்பதாகும். இருப்பினும், விட்ரெய்ன் எனப்படும் சில வகையான நிலக்கரியை எரிப்பதில் இருந்து கிடைக்கும் சாம்பலில் ஒரு குறிப்பிடத்தக்க மூலப்பொருள் காணப்படுகிறது. செருமேனியம் டெட்ராகுளோரைடு என்பது செருமேனியம் உலோகம் அல்லது அதன் ஆக்சைடு (GeO2) சுத்திகரிப்பதற்கான ஒரு இடைநிலைப் பொருள் ஆகும்.[2]
செறிவூட்டப்பட்ட ஹைட்ரோகுளோரிக் அமிலத்தில் ஆக்சைடினைக் கரைப்பதன் மூலம் செருமேனியம் டெட்ராகுளோரைடை GeO2 (செருமேனியம் ஈராக்சைடு) இலிருந்து நேரடியாக உருவாக்க முடியும். இதன் விளைவாக கலவையானது பிற பொருட்கள் மற்றும் அசுத்தங்களிலிருந்து செருமேனியம் டெட்ராகுளோரைடை சுத்திகரிக்கவும் பிரிக்கவும் பகுதியளவு வடிகட்டப்படுகிறது.[3] GeCl4 ஆனது அயனி நீக்கத்துடனான மறுநீராற்பகுப்பு செய்யப்பட்டு தூய்மையான GeO2 உருவாக்கப்படுகிறது. பின்னர், இது ஹைட்ரஜனின் சூழலில் ஒடுக்கம் செய்யப்பட்டு செருமேனியம் உலோகத்தை உருவாக்குகிறது.[2]
மேற்கோள்கள்
↑P.W. Schenk (1963). "Germanium(IV) Chloride". In G. Brauer (ed.). Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Vol. 1. NY,NY: Academic Press. pp. 715–716.
↑ 2.02.1"Germanium" Mineral Commodity Profile, U.S. Geological Survey, 2005.
↑"The Elements" C. R. Hammond, David R. Lide, ed. CRC Handbook of Chemistry and Physics, Edition 85 (CRC Press, Boca Raton, Florida) (2004)