செர்புலச்சேரி (Cherpulassery) என்பது இந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சி ஆகும்.[1] புகழ்பெற்ற அய்யப்பன்காவு கோவில் அமைந்துள்ளதால் செர்புலச்சேரி மலபாரின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது .[2] புத்தனாலக்கால் பகவதி கோயிலும் அதனுடன் தொடர்புடைய காலவேலையும் பூரம் திருவிழாவும் இப்பகுதியில் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாக்களில் ஒன்றாகும்.[3] இந்த நகரம் மாவட்டத் திலைநகரான பாலக்காட்டிலிருந்து சுமார் 43 கி. மீ (27 மை) தொலைவில் மாநில நெடுஞ்சாலை 53 இல் அமைந்துள்ளது.
வரலாறு
செர்புலச்சேரி (புலச்சேரியின் கிழக்குப் பக்கம்) என்பது சேரர் கங்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள சமஸ்தானங்களில் ஒன்றான நெடுங்கநாட்டின் தலைவரான நெடுங்கேதிர்ப்பட்டின்,[4] இருப்பிடமாக இருந்தது.[5]
மக்கள்வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, செர்புலச்சேரியின் மக்கள் தொகை 41,267 ஆகும். இதில் 19,808 பேர் ஆண்களும், 21,459 பேர் பெண்களுமாவர்.[6]
போக்குவரத்து
செர்ப்புலச்சேரியானது ஒற்றப்பாலம், பட்டாம்பி, ஷொர்ணூர், பெரிந்தல்மண்ணை ஆகிய நகரங்களுடன் பேருந்துகளால் நன்கு இணைக்கபட்டுள்ளது. இவை அனைத்தும் இங்கிருந்து 17 கி.மீ தொலைவில் உள்ளன. மண்ணார்க்காடு, பாலக்காடு ஆகிய நகரங்களுக்கு வழக்கமான பேருந்து சேவைகள் உள்ளன.
அருகிலுள்ள முக்கிய தொடருந்து நிலையம் ஷொறணூர் சந்திப்பு தொடருந்து நிலையமாகும். மற்ற நிலையங்களில் ஒற்றப்பாலம், பட்டாம்பி ஆகியவை அடங்கும் ; இவை அனைத்தும் செர்புலச்சேரியிலிருந்து சம தொலைவில் உள்ளன.
↑Rajendu, S. (2012). Neudunganad Carithram (in Malayalam) (First ed.). Perintalmanna: K. Sanakaranarayanan, Madhavam, Perintalmanna.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
↑Narayanan, M.G.S. (1996). Perumals of Kerala. Calicut: Unknown.
↑"KUDUMBASHREE". www.kudumbashree.org (in ஆங்கிலம்). Retrieved 2022-08-28.