கலாமண்டலம் குட்டன் ஆசன்
கலாமண்டலம் குட்டன் ஆசன் (Kalamandalam Kuttan Asan) இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த ஒரு கதகளி கலைஞர் ஆவார். கலாமண்டலம் குட்டனாசன் என்றும் இவர் அழைக்கப்படுகிறார். 1938 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். தக்சன் வேடத்தில் நடித்து பிரபலமானதால் தக்சன் குட்டன் என்றும் அழைக்கப்பட்டார். சங்கீத நாடக அகாடமி விருது 2008 மற்றும் கேரள மாநில கதகளி விருது 2019 உட்பட பல குறிப்பிடத்தக்க விருதுகளைப் பெற்றுள்ளார். வாழ்க்கைக் குறிப்புகுட்டன் ஆசான் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள செர்புலச்சேரி நகராட்சியின் அடக்கப்புத்தூரில் குட்டப்ப பணிக்கர் மற்றும் அம்முகுட்டியம்மா தம்பதியருக்கு 1938 ஆம் ஆண்டு பிறந்தார்[1] 1951 ஆம் ஆண்டு கலாமண்டலம் ராமன்குட்டி ஆசான் மற்றும் கலாமண்டலம் பத்மநாபன் நாயர் ஆகியோரின் கீழ் கேரள கலாமண்டலத்தில் பட்டயப் படிப்பு முடித்த இவர் 1951 ஆம் ஆண்டு வெள்ளிநேழி காந்தளூர் கோயிலில் அறிமுகமானார். [1] [2] 1964 ஆம் ஆண்டு இரிங்கலக்குடா உன்னிவாரியார் நினைவுக் கலாநிலையத்தில் கதகளி ஆசிரியராகச் சேர்ந்து, 1990 ஆம் ஆண்டு கலாநிலையத்தின் உப அதிபராகப் பதவியேற்று 1995 ஆம் ஆண்டு அதிபரானார் [1] தக்சன் வேட்டத்தில் இவருடைய பங்கு மிகப் பிரபலமாக இருந்ததால் இவர் தக்சன் குட்டன் என்று அறியப்பட்டார். [2] கதகளியில் குட்டன் ஆசான் கட்டலான், பிராமணன், பலபத்ரன், உருத்ரபீமன் போன்ற வேடங்களிலும் பச்சா மற்றும் கதி வேடங்களிலும் சிறந்து விளங்கினார்.[3] நாற்பது ஆண்டுகளாக கூடல்மாணிக்கம் கோயில் திருவிழாவில் இவர் சிறீராம பட்டாபிகம் நிகழ்வில் விபீசணன் வேடத்தில் நடித்தார். [3] தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் இறப்புகுட்டன் ஆசானுக்கும் அவரது மனைவி இலீலாவதிக்கும் உசா மதுமோகனன், சதி ராதாகிருட்டிணன் மற்றும் கீதா மது என்ற மூன்று குழந்தைகள் இருந்தனர். [1] இவர் 84. வயதில், 13 ஜனவரி 2022 அன்று பெரிந்தல்மன்னாவில் இறந்தார் [2] விருதுகளும் கௌரவங்களும்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia