சேது (எழுத்தாளர்)
ஏ. சேதுமாதவன் (ஆங்கிலம்: A. Sethumadhavan) (பிறப்பு 1942 சூன் 5), சேது என்று பிரபலமாக அறியப்பட்ட இவர் ஒரு மலையாள புனைகதை எழுத்தாளர் ஆவார். அவர் 35 க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார். அதியலங்கல் என்ற படைப்பிற்காக 2007 ல் கேந்திரா சாகித்ய அகாடமி விருதை வென்றார் . பாண்டவபுரம் மற்றும் பெதிசுவப்நங்கள் ஆகிய படைப்புகளுக்காக 1982 மற்றும் 1978 ஆம் ஆண்டுகளில் கேரள சாகித்ய அகாடமி விருதுகளைப் பெற்றார். மேலும் 2005 இல் அதியலங்கலுக்கான வயலார் விருதும் இவருக்கு கிடைத்தது. [1] தனது மறுவிறவி என்ற புதினத்திற்காக ஓடக்குழல் விருதையும் வென்றார். சேதுவின் பிற இலக்கியப் படைப்புகளில் வெளுத்த கூடாரங்கள், தலியோலா, கிராதம், நியோகம், சேதுவின்டே கதகல் மற்றும் கைமுத்ரகல் ஆகியவை அடங்கும். இவர் சௌத் இந்தியன் வங்கியின் தலைவராகவும் அதன் முதன்மை செயல் அலுவலராகவும் பணியாற்றியுள்ளார். வாழ்க்கைசேது 1942 ஆம் ஆண்டில் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள சேந்தமங்கலம் என்ற கிராமத்தில் பிறந்தார். சேந்தமங்கலத்தில் உள்ள பாலியம் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வியைப் பெற்ற இவர், 18 வயதில் ஆலுவாவின் இயூனியன் கிருத்துவக் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சேதுவின் தொழில் வாழ்க்கை மிகச் சிறிய வயதிலேயே நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இவரை அழைத்துச் சென்றது. இந்த காலகட்டத்தில் தனது இலக்கிய உணர்வுகளை கட்டமைத்துக் கொண்டார். இது இவரது பல முக்கியமான படைப்புகளில் பிரதிபலித்தது. 1962 இல் மும்பையிலுள்ள இந்திய வானிலை ஆய்வுத் துறையில் சேருவதற்கு முன்பு வட இந்தியாவில் சில மத்திய அரசு துறைகளில் பணியாற்றினார். 1964 ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்திற்கு இடமாற்றம் செய்து தும்பா நிலநடுக்கோட்டு ஏவூர்தி ஏவுதளம்| நிலையத்தின் வானிலை ஆய்வு பிரிவில் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து, புனேவில் புதிதாக நிறுவப்பட்ட வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தில் பதவி உயர்வு பெற்று நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் 1968 ஆம் ஆண்டில் வங்கித் தொழிலுக்கு மாறுவதற்கு முன்பு ஓரிரு ஆண்டுகள் புது தில்லியிலுள்ள இரயில்வே வாரியத்தில் பணியாற்றினார். பாரத ஸ்டேட் வங்கிக் குழுவில் ஒரு நன்னடத்தை அதிகாரியாக வங்கித் தொழிலில் சேர்ந்தார். குழுவில் பல முக்கிய பதவிகளை வகித்த பின்னர், கார்ப்பரேஷன் வங்கியில் பொது மேலாளராகவும் பின்னர் நாட்டின் முக்கிய தனியார் துறை வங்கியான சௌத் இந்தியன் வங்கியின் தலைவராகவும் பொறுப்பேற்றார். 1999 முதல் 2005 இல் ஓய்வு பெறும் வரை திருவாங்கூர் ஸ்டேட் வங்கியின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலராகப் பணியாற்றினார். ஓய்வு பெற்ற மூன்று வருட காலத்திற்கு திருவாங்கூர் ஸ்டேட் வங்கியின் குழுவிலும் இருந்தார். பரவலாகப் பயணம் செய்த சேது, பல்வேறு நாடுகளில் வங்கி மற்றும் இலக்கியம் தொடர்பான நடைபெற்ற பல சர்வதேச மாநாடுகளில் கலந்து கொண்டார். 2012 செப்டம்பரில், பிரபல வரலாற்றாசிரியர் பிபன் சந்திராவுக்குப் பின்னர் புதுதில்லியின் நேஷனல் புக் டிரஸ்ட் அறக்கட்டளையின் தலைவரானார்.[2] 2015 மார்ச் மாதம், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் இவரது பதவிக்காலம் முடிவடைவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு இவரை பதவியில் இருந்து நீக்கியது.[3] சேதுக்கு பதிலாக ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் பத்திரிக்கையான பஞ்சஜன்யாவின் முன்னாள் ஆசிரியர் பல்தேவ்பாய் சர்மா சேதுவிற்குப் பின்னர் அப்பதவியில் நியமிக்கப்பட்டார்.[4] எழுதுதல்1967-இல் தனது முதல் சிறுகதையை எழுதினார். "இது [கதை] பீகாரில் ஏற்பட்ட கடுமையான வறட்சியைப் பற்றியது; மோசமான பாதிப்புக்குள்ளான பகுதிகள் மற்றும் மனித துன்பங்களின் காட்சிகளைப் பார்வையிட்ட பிறகு, எழுத்தின் கைவினைப் பற்றி எதுவும் தெரியாமல் நான் கதையை எழுதினேன் என சேது கூறுகிறார். இந்தக் கதை மாத்ருபூமி பத்திரிகையில் அதன் புகழ்பெற்ற ஆசிரியரும் எழுத்தாளருமான எம். டி. வாசுதேவன் நாயரால் வெளியிடப்பட்டது.[5] நவீன மலையாள புனைகதையின் முன்னோடிகளில் ஒருவரான சேது, அறுபதுகள் மற்றும் எழுபதுகளின் ஆரம்பத்தில் தனது எழுத்துக்கள் மூலம் ஒரு தீவிரமான மாற்றத்தைக் கொண்டுவந்தார். நான்கரை தசாப்தங்களாக நீடித்த ஒரு இலக்கிய வாழ்க்கையில், சேது 18-க்கும் மேற்பட்ட புதினங்களையும் 20 சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதினார். இவரது பல புதினங்கள் மற்றும் கதைகள் ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவரது முக்கிய படைப்புகளில் பாண்டவபுரம், நியோகம், கைமுத்ரகல், விலையாட்டம், அதையலங்கல், கிளிமொழிகல்கப்பூரம், மறுபிறவி மற்றும் அலியா (நாவல்கள்), பெதிசுவப்நங்கள், தூத்து, சிலாக்காலங்கலில் சிலா காயத்ரிமார், அருந்ததியுடே விருண்ணுகரன் மற்றும் சேதுவிந்தே கதகள் (சிறுகதைகள்), மற்றும் சனிதாசா, யாத்ரகிதாயில் (கட்டுரைகள்) போன்றவை அடங்கும். சாகித்திய அகாதமி விருது, புதினம் மற்றும் சிறுகதை இரண்டிற்கும் கேரள சாகித்ய அகாடமி விருது, வயலார் விருது, ஓடக்குழல் விருது மற்றும் முட்டத்து வர்க்கி விருது உள்ளிட்ட பல விருதுகளை சேது பெற்றுள்ளார். இவரது நான்கு படைப்புகளில் மிகவும் பாராட்டப்பட்ட பாண்டவபுரம் உள்ளிட்டவை படங்களாக தயாரிக்கப்பட்டுள்ளன. இது நிராகர் சாயா என்ற பெயரில் வங்காள மொழியில் தயாரிக்கப்பட்டது. அலியா (2013) இவரது சமீபத்திய படைப்பாகும். விருதுகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia