சேருவிலை பிரதேச செயலாளர் பிரிவு

சேருவில் பிரதேச செயலாளர் பிரிவு திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலாளர் பிரிவுகளுள் ஒன்று. இப்பிரதேச செயலாளர் பிரிவின் வடக்கு எல்லையில் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவும், மேற்கு எல்லையை அண்டி கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவும், கிழக்கில் ஈச்சிலம்பத்தை பிரதேச செயலாளர் பிரிவும், இந்துப் பெருங்கடலும், தெற்கில் பொலநறுவை மாவட்டமும் அமைந்துள்ளன. 311 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தப் பிரதேச செயலாளர் பிரிவில் 17 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன.

2012 ஆம் ஆண்டின் மக்கள்தொகை மதிப்பீட்டின்படி, மொத்த மக்கள்தொகை 13,546 ஆகும். பெரும்பான்மை சிங்களவர்களைக் கொண்ட இப்பிரிவில், 2,426 முசுலிம்களும், 1,816 இலங்கைத் தமிழரும், 9,293 சிங்களவரும், 3 இந்திய வம்சாவளித் தமிழரும் வாழ்கின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் குறைவான மக்கள் அடர்த்தி கொண்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுள் ஒன்றான இப்பிரிவின் மக்கள் அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 44 பேர்.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya