பதவிசிறிபுர பிரதேச செயலாளர் பிரிவு

பதவிசிறிபுர பிரதேச செயலாளர் பிரிவு திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலாளர் பிரிவுகளுள் ஒன்று. இப்பிரதேச செயலாளர் பிரிவின் வடக்கு எல்லையில் முல்லைத்தீவு மாவட்டமும், மேற்கு எல்லையை அண்டி வவுனியா, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களும், கிழக்கில் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவும், தெற்கில் கொமரங்கடவலை பிரதேச செயலாலர் பிரிவும் அமைந்துள்ளன. 152 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தப் பிரதேச செயலாளர் பிரிவில் 10 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன.

2012 ஆம் ஆண்டின் மக்கள்தொகை மதிப்பீட்டின்படி, மொத்த மக்கள்தொகை 11,858 ஆகும். எறத்தாழ முழுவதும் சிங்களவர்களையேகொண்ட இப்பிரிவில், ஒரு முசுலிமும், 10 இலங்கைத் தமிழரும், 11,846 சிங்களவரும் வாழ்கின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் உள்ள குறைவான மக்கள் அடர்த்தி கொண்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுள் ஒன்றான இப்பிரிவின் மக்கள் அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 78 பேர்.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya