சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் கோயில்
சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் கோயில் என்பது தூத்துக்குடி மாவட்டம் சேர்ந்தமங்கலத்தில் அமைந்துள்ள சிவாலயமாகும்.[1] இத்தலம் நவ கைலாயங்களுள் ஒன்றாகவும், நவக்கிரகங்களில் சுக்ரனுக்கு உரிய தலமாகவும் இருக்கிறது. சன்னதிகள்மூலவர் கைலாசநாதர்[2] சுக்கிர அம்சமானவர். அம்பாள் அழகிய பொன்னமை என்ற பெயரில் இருக்கிறார். இவரை சௌந்தர நாயகி என்றும் அழைக்கின்றனர்.[3] அம்மன் தெற்கு நோக்கி உள்ளார். கருவறை விமானத்தில் குபேரன் இரு மனைவியரோடு யானை மீது இருக்கிறார். கன்னி விநாயகர், சந்திரன், சூரியர், மீனாட்சி, சொக்கநாதர், சனீசுவரர், பைரவர் சந்நிதிகளும், முருப்பெருமான் சன்னதியில் வலப்புறம் திரும்பிய மயில் வாகனத்துடன் இருக்கிறார். இக்கோயில் 1000 வருடங்கள் தொன்மையானது. இதனை குலசேகரப் பாண்டியன் அல்லது முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆகியோர் கட்டியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.[4] தல வரலாறுஅகத்திய முனிவரின் சீடர்களில் முக்கியமானவரான உரோமச முனிவர் தன் குருவான அகத்தியரின் உதவியுடன் சிவபெருமானை நேரில் தரிசித்து, அதன் மூலம் முக்தி அடைய வேண்டும் என்று விரும்பி தனது குருவிடம் அதற்கான வழிமுறைகளைக் கேட்டதாகவும், அதற்கு அகத்திய முனிவரும் தாமிரபரணி ஆற்றில் 9 தாமரை மலர்களை மிதக்க விட்டு அவை ஒவ்வொன்றாக கரை ஒதுங்கும் இடங்களில் சங்கு மூலம் நீராடி நவக்கிரகங்களின் வரிசையில் சிவபெருமானை வழிபட்டால் சிவபெருமானின் காட்சி கிடைக்கும் என்றும் அதன் மூலம் முக்தி அடையலாம் என்று சொல்லி 9 தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டதாகவும் அந்த மலர்களை தொடர்ந்து சென்ற உரோமச முனிவரும் தனது குரு கூறியபடி வழிபட்டு முக்தி அடைந்தார் என்றும் அப்படி அம்மலர்கள் கரை ஒதுங்கிய இடங்கள் தான் இப்போது நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுவதாகவும் இத்தலங்களின் வரலாறு கூறுகின்றது. இவ்வாறு ஒன்பதாவது தாமரை மலர் கரை ஒதுங்கிய இடம் சேர்ந்தபூமங்கலமாகும். இதுவே நவகைலாயத்தின் இறுதித் தலமாக உள்ளது. திருவிழாக்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia