சொக்கநாத வெண்பாசொக்கநாத வெண்பா என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குருஞான சம்பந்தரால் இயற்றப்பட்டது. இந்த நூலில் 100 வெண்பாப் பாடல்கள் உள்ளன. இவை ‘சொக்கநாதா’ என முடிகின்றன. அதனால் இந்த நூலுக்குச் சொக்கநாத வெண்பா என்னும் பெயர் உண்டாயிற்று. மதுரைச் சொக்கந்தரைப் போற்றி இவை பாடப்பட்டவை. இந்த நூலில் உள்ள பாடல்கள் பொருள் தொடர்பு இல்லாமல் இருப்பதால் பல்வேறு காலகட்டங்களில் இவரால் பாடப்பட்டதாக அறிஞர்கள் கருதுகின்றனர். பாடல்களில் அருணகிரிநாதர் செய்த பேசா அனுபூதி, சிவஞான சித்தியார் முதலான நூல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கருவிநூலாகத் தரப்பட்டுள்ள நூலில் இவரது பாடல்கள் 9 இடம்பெற்றுள்ளன. அவற்றில் 3 பாடல்கள் மட்டும் இங்கு எடுத்துக்காட்டாகத் தரப்படுகின்றன. [1] அன்பர்க்கு அருள் புரிவது அல்லாமல் தேவரீர் வாக்கில் உரை பொய்யே மனம் நினைப்பதும் கவடே பேரன்பன் அல்லன் பிழை செய்யான் தான் அல்லன் கருவிநூல்
அடிக்குறிப்பு
|
Portal di Ensiklopedia Dunia