சிவஞான சித்தியார்

சிவஞான சித்தியார் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளை விளக்க எழுந்த மெய்கண்ட சாத்திரங்கள் எனப்படும் பதினான்கு நூல்களுள் ஒன்றாகும். சிவஞான போதத்தின் வழி நூலான இதனை இயற்றியவர் அருணந்தி சிவாச்சாரியார் ஆவார். இவர் சிவஞான போதத்தை இயற்றிய மெய்கண்ட தேவரின் மாணவன். இந்நூல் எழுதப்பட்ட ஆண்டு சாலிவாகனம் 1175 (பொஊ 1253).[1]

பரபக்கம், சுபக்கம் என இரண்டு பகுதிகளைக் கொண்டது இந்த நூல். சைவ சித்தாந்தத்துடன் முரண்படுகின்ற புறச்சமயக் கொள்கைகளை மறுத்துச் சித்தாந்தக் கொள்கைகளை நிலை நாட்ட முயல்வதே பரபக்கம் என்னும் பகுதியின் நோக்கம். சுபக்கம் சிவஞான போதத்தின் 12 சூத்திரங்களை பன்னிரண்டு அத்தியாயங்களாக விரித்து எழுதப்பட்ட பகுதி. பரபக்கம், 301 பாடல்களாலும், சுபக்கம், 328 பாடல்களாலும் ஆனது.

உசாத்துணைகள்

  • இராசமாணிக்கனார். மா., சைவசமய வளர்ச்சி, பூங்கொடி பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை, மூன்றாம் பதிப்பு: டிசம்பர் 1999 (முதற்பதிப்பு: 1958)

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. சீனி. வெங்கடசாமி, மயிலை (நவம்பர் 1927). "காலக் குறிப்பு". லக்ஷ்மி. Vol. 5, no. 2. மதராசு. p. 61.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya