சொரயா தார்சி
சொரயா தார்சி (Soraya Tarzi) பிறப்பு: 1899 நவம்பர் 24 - இறப்பு: 1968 ஏப்ரல் 20) (பிரித்தானிய பேரரசின் ஒழுங்கு) [1][2][3][4] 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆப்கானித்தானின் முதல் ராணியும் மற்றும் மன்னர் அமனுல்லா கானின் மனைவியுமாவார். சிரியாவில் பிறந்த இவர், ஆப்கானித்தான் தலைவரும், அறிஞருமான சர்தார் மகமுது பேக் தார்சியுமான இவரது தந்தையின் மூலம் கல்வி கற்றார். இவர் பராக்சாய் வம்சத்தின் துணை பழங்குடியினரான முகமதுசாய் பஷ்தூன் பழங்குடியினத்தைச் சேர்ந்தவராவார். ஆரம்பகால வாழ்க்கை மற்றும் குடும்ப பின்னணிசொரயா தார்சி 1899ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி சிரியாவின் தமாசுகசில் பிறந்தார். இந்நகரம் உதுமானியப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. இவர் ஆப்கானிய அரசியல் பிரமுகர் சர்தார் மகமுது பேக் தார்சியின் மகளும், மற்றும் சர்தார் குலாம் முகம்மது தார்சியின் பேத்தியுமாவார்.[5] இவர் சிரியாவில் படித்து, மேற்கத்திய மற்றும் நவீன மதிப்புகளைக் கற்றுக்கொண்டார்.[4] இது இவரது எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் நம்பிக்கைகளுக்கு உத்வேகம் அளித்தது. இவரது தாயார் கான் அஸ்மா ராஸ்மியா, இவரது தந்தையின் இறண்டாவது மனைவியும், அலெப்போவைச் சேர்ந்த உமையாத் மசூதியின் ஓதுவாரான ஷேக் முஹம்மது சலே அல்-ஃபத்தல் எஃபெண்டியின் மகளுமாவார். 1901 அக்டோபரில் அமானுல்லாவின் தந்தை ( ஹபிபுல்லா கான் ) ஆப்கானிஸ்தானின் மன்னரானபோது, அவரது தேசத்திற்கு அவர் அளித்த மிக முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று ஆப்கானிய தார்சி குடும்பத்தினர் மற்றும் பிறரின் பங்களிப்பு. தார்சி குடும்பம் ஆப்கானிஸ்தானின் நவீனமயமாக்கலை ஊக்குவித்ததே இதற்குக் காரணம்.[6] இவரது குடும்பம் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பியதும், சொரயா தார்சி மன்னர் அமானுல்லா கானை சந்தித்து திருமணம் செய்து கொண்டார்.[4] ஆப்கானித்தான் ராணிதார்சிகள் ஆப்கானித்தானுக்குத் திரும்பிய பிறகு, அமீர் ஹபீபுல்லா கான் விரும்பியபடி அவர்கள் அரசவையின் சார்பில் வரவேற்கப்பட்டனர். அமிரா ஹபிபுல்லா கானின் மகன் இளவரசர் அமனுல்லாவை சொரயா தார்சி 1913 ஆகத்து 30, அன்று காபூலில் உள்ள கவ்ம்-இ-பாக் அரண்மனையில் தார்சி மன்னர் அமனுல்லா கானின் ஒரே மனைவியாவார். இது பல நூற்றாண்டுகளின் பாரம்பரியத்தை உடைத்தது. இவர் முடியாட்சியில் திருமணம் மன்னர் பிராந்தியத்தின் மிக முக்கியமான நபர்களில் ஒருவராக வளர்ந்தார். 1928ஆம் ஆண்டில் சொரயா ராணி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கௌரவ பட்டம் பெற்றார். ஆப்கானித்தான் ராணியாக, இவர் ஒரு பதவியை நிரப்பியது மட்டுமல்லாமல் - அந்த நேரத்தில் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க பெண்களில் ஒருவரானார்.[4] மன்னர் அமனுல்லா கான் ஏற்படுத்திய சீர்திருத்தங்களால், நாட்டின் மத பிரிவுகள் வன்முறையில் வளர்ந்தன. 1929ஆம் ஆண்டில், ஒரு உள்நாட்டு யுத்தத்தைத் தடுப்பதற்காக மன்னர் பதவி விலகினார். மேலும், நாடுகடத்தப்பட்டார்.[4] மன்னர் மற்றும் ராணி இருவரும் பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்த இந்தியாவில் தங்க வைக்கப்பட்டனர். இறுதி ஆண்டுகள்சொரயா தனது குடும்பத்தினருடன் இத்தாலியின் ரோம் நகருக்கு நாடுகடத்தப்பட்டார். சொரயார் 1968 ஏப்ரல் 20 அன்று ரோமில் இறந்தார்.[7] இவரது உடல் ஆப்கானித்தான் கொண்டு வருவதற்கு முன்பு இத்தாலிய இராணுவதினரால் மரியாதை மரியாதைச் செலுத்தப்பட்டது. இவரது உடல் பாக்-இ அமீர் ஷாஹீத் என்ற இடத்தில் புதைக்கப்பட்டார்.[8] அவரது இளைய மகள் ஆப்கானிஸ்தானின் இளவரசி இந்தியா 2000களில் ஆப்கானித்தானுக்கு வருகை புரிந்து பல்வேறு தொண்டு திட்டங்களை அமைத்துள்ளார்.[4][9] இளவரசி இந்தியா ஐரோப்பாவிற்கான ஆப்கானிஸ்தானின் கௌரவ கலாச்சார தூதராகவும் உள்ளார். 2011 செப்டம்பரில், ஆப்கானித்தான் இளவரசி இந்தியா ஆப்கானிஸ்தான்-அமெரிக்க மகளிர் சங்கத்தால் பெண்கள் உரிமைகளில் பணியாற்றியதற்காக கௌரவிக்கப்பட்டார்.[10] குறிப்புகள்
வெளி இணைப்புகள்![]() விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: சொரயா தார்சி |
Portal di Ensiklopedia Dunia