சோஃபியா வாசிலியேவ்னா கோவலெவ்சுகாயா (Sofia Vasilyevna Kovalevskaya, உருசியம்: Со́фья Васи́льевна Ковале́вская, 15 சனவரி [யூ.நா. 3 சனவரி] 1850 – 10 பிப்ரவரி [யூ.நா. 29 சனவரி] 1891) ஒரு முதல் பேராளுமை வாய்ந்த பெண் கணிதவியலாளர் ஆவார். இவர் கணிதப் பகுப்பாய்விலும்வகைநுண் கலனத்திலும்இயக்கவியலிலும் மூலமுதல் பங்களிப்புகளைச் செலுத்தியுள்ளார். இவர்தான் வட ஐரோப்பாவில் முதன்முதலாகப் பேராசிரியரான பெண் ஆவார். ஓர் அறிவியல் இதழில் முதல் பெண் பதிப்பாசிரியராக விளங்கியவரும் இவரே.[1]
அவரது உருசியப் பெயர் பலவகைகளில் உரோம மயப்படுத்தப்படுவது உண்டு. என்றாலும் அவர் தம்மை எப்போதும் "சோஃபீ கோவலவ்சுகி" எனக் கூறிக்கொள்வார். கல்விப்பணி வெளியீடுகளில் மட்டும் (அவ்வப்போது "கோவலவ்சுகி"), எனவும் மாற்றிக்கொள்வார்.. சுவீடன் வந்ததும் தம்மைச் "சோனியா" என அழைத்துக்கொண்டார்.
பாராட்டுகள்
நினைவு நாணயம், 2000.கோவியத் யூனியன் அஞ்சல் தலை, 1951.
சோனியா கோவலவ்சுகி உயர்நிலைப் பள்ளிக் கணித நாள் என்பது மகளிர் கணிதவியல் கழகம் நடத்தும் புது உருவாக்கத் திட்டமாகும். இது அமெரிக்காவில் நாடெங்கும் பணிப்பட்டறைகளை நடத்தி மகள்ரைக் கணித ஆய்வில் ஆர்வமூட்டுகிறது.
சோனியா கோவலவ்சுகி விரிவுரை என்ற நிகழ்ச்சியை AWM ஒவ்வோராண்டும் நடத்துகிறது இதில் பயன்முறை, கணிப்பியல் கணிதவியலில் பங்காற்றிய பேராளுமைகளைப் பற்றிய உரைகள் ஆற்றப்படுகின்றன. முன்பு இந்நிகழ்ச்சியில் உரையாற்றிப் பெயர்பெற்றவர்களீல் இரீன் பொன்சேகா (2006), இங்கிரிடு டௌபெச்சீசு (2005), ஜாய்சு ஆர்.மெக்லௌலின் (2004), இலிண்டா ஆர். பெட்சோல்டு (2003) ஆகியோர் அடங்குவர்.
"Little Sparrow: சோஃபியா கோவலவ்சுகியின் வாழ்க்கைச் சித்திரம்" (1983), Don H. Kennedy, Ohio University Press, Athens, Ohio
"Beyond the Limit: The Dream of Sofya Kovalevskaya" (2002), இது சோஃபியாவின் வாழ்க்கை வரலாற்றுப் புதினமாகும். இதை யோன் சுபிசி எனும் கணிதக்கல்வியாளரால் புனையப்பட்டது. வெளியீடு: Tom Doherty Associates, LLC, இது அவரது மணவாழ்க்கையையும் கல்வி ஈடுபாட்டையும் வரலாற்றியலாக படைக்கிறது. இது புதின ஆசிரியர் உருசிய மொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த சோஃபியாவின் கடிதங்கள்ளால் உருவாகியது.
Against the Day, 2006 புதினம், தாமசு பிஞ்சன் இது சோஃபியாவின் வாழ்க்கையைப் பற்றி எழுத தீட்டமிடப்பட்ட்து, ஆனால் முடிவுற்ற புதினத்தில் அவர் சிறுபாத்திரமாக வருகிறார்.
Kowalevski, Sophie (1884), "Über die Reduction einer bestimmten Klasse Abel'scher Integrale 3ten Ranges auf elliptische Integrale", Acta Mathematica, 4 (1): 393–414, doi:10.1007/BF02418424
Kowalevski, Sophie (1885), "Über die Brechung des Lichtes In Cristallinischen Mitteln", Acta Mathematica, 6 (1): 249–304, doi:10.1007/BF02400418
Kowalevski, Sophie (1889), "Sur le probleme de la rotation d'un corps solide autour d'un point fixe", Acta Mathematica, 12 (1): 177–232, doi:10.1007/BF02592182
Kowalevski, Sophie (1890), "Sur une propriété du système d'équations différentielles qui définit la rotation d'un corps solide autour d'un point fixe", Acta Mathematica, 14 (1): 81–93, doi:10.1007/BF02413316
Kowalevski, Sophie (1891), "Sur un théorème de M. Bruns", Acta Mathematica, 15 (1): 45–52, doi:10.1007/BF02392602
புதினம்
இன்மைசார் இளம்பெண், மேரி சிரீனும் நடாஷா கோல்செவ்சுகாயாவும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது; அறிமுகம்: நடாஷா கோல்செவ்சுகாயா. அமெரிக்க புத்தியல் மொழிக்கழகம் (2001) பன்னாட்டுத் தரப்புத்தக எண்0-87352-790-9
மேற்கோள்கள்
↑"Sofya Vasilyevna Kovalevskay". Encyclopædia Britannica Online Academic Edition. Encyclopædia Britannica. Retrieved 22 October 2011.
Ann Hibner Koblitz: A Convergence of Lives: Sofia Kovalevskaia -- Scientist, Writer, Revolutionary (Rutgers University Press, 1983)
A. H. Koblitz, Sofia Vasilevna Kovalevskaia in Louise S. Grinstein (Editor), Paul J. Campbell (Editor) (1987), Women of Mathematics: A Bio-Bibliographic Sourcebook, Greenwood Press, New York, ISBN978-0-313-24849-8{{citation}}: |author= has generic name (help)
Roger Cooke, The Mathematics of Sonya Kovalevskaya (Springer-Verlag, 1984)