சோடியம் பெராக்சைடு
சோடியம் பெராக்சைடு (Sodium peroxide) என்பது Na2O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சோடியம் அதிக அளவு ஆக்சிசனில் எரிக்கப்படும்போது இந்த மஞ்சள் நிற உலோக பெராக்சைடு திண்மம் உருவாகிறது [3]. ஒரு வலிமையான காரமான இச்சேர்மம் Na2O2•2H2O2•4H2O, Na2O2•2H2O, Na2O2•2H2O2, மற்றும் Na2O2•8H2O. போன்ற நீரேற்று வடிவங்களில் காணப்படுகிறது.[4].இதில் எண் நீரேற்றை தயாரிப்பது எளிமையாகும். வெண்மை நிறத்திலுள்ள இது நீரற்ற இச்சேர்மத்திலிருந்து மாறுபடுகிறது [5]. டைசோடியம் டையாக்சைடு, புளோகூல், சோலோசோன், டைசோடியம் பெராக்சைடு என்ற பெயர்களாலும் சோடியம் பெராக்சைடு அழைக்கப்படுகிறது. பண்புகள்மஞ்சளும் வெண்மையும் கலந்த நிறத்தில் திண்மமாக சோடியம் பெராக்சைடு தோன்றுகிறது. எரியக்கூடிய பொருள்களுடன் சேர்க்கப்படும்போது உராய்வு, வெப்பம். போன்ற காரணிகளால் விரைவாக தீப்பற்றி எரிகிறது. அமிலங்களில் நன்றாகக் கரையக்கூடிய இச்சேர்மம் காரங்களில் கரைவதில்லை. கொதிநிலை மற்றும் உருகுநிலை வெப்பநிலைகளில் சோடியம் பெராக்சைடு சிதவடையும். அறுகோண சீரொழுங்கு கட்டடமைப்பில் சோடியம் பெராக்சைடு சேர்மம் படிகமாகிறது.[6]. 512 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு இதை சூடுபடுத்தும்போது அறுகோன வடிவக் கட்டமைப்பு ஓர் அறியப்படாத சீரொழுங்குள்ள படிகமாக மாறுகிறது[7]. மேலும் அதிகமாக கொதிநிலையான 657 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் சோடியம் பெராக்சைடு சிதைவடைந்து ஆக்சிசன் வாயுவை விடுவித்து சோடியம் ஆக்சைடு சேர்மமாக மாறுகிறது[8].
தயாரிப்புசோடியம் ஐதராக்சைடுடன் ஐதரசன் பெராக்சைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் எண் நீரேற்று வகை சோடியம் பெராக்சைடை தயாரிக்க முடியும்[5]. 130-200 பாகை செல்சியசு வெப்பநிலையில் தனிம நிலை சோடியம் உலோகத்தை ஆக்சிசனுடன் சேர்த்து வினைபுரியச் செய்து பெருமளவில் சோடியம் பெராக்சைடு தயாரிக்கப்படுகிறது. முதலில் இச்செயல்முறையில் சோடியம் ஆக்சைடு உருவாக்கப்பட்டு பின்னர் தனியாக மற்றொரு செயல்முறையில் ஆக்சிசன் சேர்க்கப்படுகிறது:[7][9]
பிளாட்டினம் அல்லது பலேடியம் குழாயினுள் இருக்கும் திண்ம சோடியம் அயோடைடு மீது ஓசோன் வாயுவைச் செலுத்தியும் சோடியம் பெராக்சைடை தயாரிக்கலாம். சோடியத்தை ஒசோன் வாயு ஆக்சிசனேற்றம் அடையச் செய்து சோடியம் பெராக்சைடை உருவாக்குகிறது. இலேசாக சூடுபடுத்தினால் வினை கலவையிலுள்ள அயோடைடு பதங்கமாகிவிடும். இவ்வினையில் பிளாட்டினம் அல்லது பலேடியம் வினையூக்கியாகச் செயல்படுகிறது. இது சோடியம் பெராக்சைடால் தாக்கப்படுவதில்லை. பயன்கள்சோடியம் பெராக்சைடு கீழுள்ள வேதி வினையின்படி நீராற்பகுப்பு அடைந்து சோடியம் ஐதராக்சைடையும் ஐதரசன் பெராக்சைடையும் கொடுக்கிறது:[9]
காகித உற்பத்தி மற்றும் நெசவுத் தொழிலில் வெளுப்பாக்கத்திற்காக சோடியம் பெராக்சைடு பயன்படுத்தப்படுகிறது. தாதுக்களிலிருந்து கனிமங்களைப் பிரித்தெடுக்கும் செயல்முறையில் ஆய்வகங்களில் தற்போது சோடியம் பெராக்சைடு சிறப்பாகப் பயன்படுத்தப்படுகிறது. சோலோசோன்[7] புளோகூல் [8] என்ற வர்த்தகப் பெயர்களில் சோடியம் பெராக்சைடு விற்பனை செய்யப்படுகிறது. வேதித் தயாரிப்புகளில் ஆக்சிசனேற்றும் முகவராக இதை பயன்படுத்துகிறார்கள். கார்பன் டை ஆக்சைடுடன் இதை வினைபுரியச் செய்வதன் மூலம் ஆக்சிசனையும் சோடியம் கார்பனேட்டையும் உருவாக்கி ஓர் ஆக்சிசன் மூலமாகவும் சோடியம் பெராக்சைடு பயனளிக்கிறது. குறிப்பாக நீந்துபவர்கள் மூச்சுவிட உதவும் சாதனங்களிலும் நீர்முழ்கிக் கப்பல்களிலும் சக்கர நெம்புகோலாக இது பயன்படுகிறது. இலித்தியம் பெராக்சைடும் இதேபோன்ற பண்புகளை வெளிப்படுத்துகிறது. 2Na2O2 + 2CO2 → 2Na2CO3 + O2 மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia