சோடியம் அயோடைடு
சோடியம் அயோடைடு (Sodium iodide) என்பது NaI என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சோடியம் அயனியும் அயோடைடு அயனியும் சேர்ந்து உருவாகும் இவ்வுப்பு வெண்மை நிறத்தில் காணப்படுகிறது. கரிம வேதியியலில் இந்தப் படிகத் திடப்பொருள் முக்கியமான ஓர் உணவுச் சேர்க்கைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக அமில அயோடைடுகளுடன் சோடியம் ஐதராக்சைடு சேர்ப்பதால் சோடியம் அயோடைடு உருவாகிறது. பயன்கள்உணவுச் சேர்க்கைப் பொருளாகசோடியம் அயோடைடும் பொட்டாசியம் அயோடைடும் பொதுவாக அயோடின் குறைபாட்டை நிவர்த்தி செய்ய பயன்படுகின்றன. வீடுகளில் பயன்படுத்தப்படும் அயோடின் கலந்த உணவு உப்பில் 100000 பகுதிகள் சோடியம் குளோரைடுடன் ஒரு பகுதி சோடியம் அல்லது பொட்டாசியம் அயோடைடு சேர்க்கப்படுகிறது[3] கரிமத் தொகுப்பு வினைகள்ஆல்க்கைல் குளோரைடுகளை ஆல்க்கைல் அயோடைடுகளாக மாற்றுவதற்கு சோடியம் அயோடைடு பயன்படுகிறது. பிங்கெல்சிடீன் வினை எனப்படும் இவ்வினையில் அசிட்டோனில் சோடியம் குளோரைடு கரைவதில்லை என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு வினைவிளை பொருள் தருவிக்கப்படுகிறது.
அணுக்கரு மருத்துவத்தில்[125I]NaI மற்றும் [131I]NaI உள்ளிட்ட சோடியத்தின் சில கதிரியக்க உப்புகள், தைராய்டு புற்று மற்றும் உயர் தைராய்டு மிகைப்பு போன்ற நோய்களுக்கான கதிரியக்க மருத்துவச் சிகிச்சையில் பயன்படுகின்றன[4] அல்லது கதிரியக்கப் பெயரிடலில் சுவடுகாண் தனிமமாக ஓரிடத்தான்களின் பாதையை கண்டறியப் பயன்படுகின்றன. ( அயோடினின் ஓரிடத்தான்கள்: மருத்துவம் மற்றும் உயிரியலில் கதிரியக்க அயோடின்கள் I-123, I-124, I-125, மற்றும் I-131). தாலியம் கலப்பிடப்பட்ட NaI(Tl) மினுமினுப்பாக்கிகள்சோடியம் அயோடைடு தாலியத்துடன் சேர்க்கப்பட்டு செயலூக்கப்படுகிறது. பின்னர் இது கதிர்வீச்சு அயனியாக்கத்தின் போது போட்டன் எனப்படும் ஒளியன்களை ( மினுக்குகள்) உமிழ்கிறது. இவையே அடர்வு காணி அல்லது மினுமினுப்பு காணியாகவும் மரபார்ந்த வகையில் அணுக்கரு மருந்தாகவும் , புவி இயற்பியல், அணுக்கரு இயற்பியல் மற்றும் சுற்றுச் சூழல் அளவீடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. பரவலாக NaI(Tl) மினுமினுக்கும் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. சோடியம் அயோடைடு நீர் உறிஞ்சும் தன்மை கொண்டது என்பதால், NaI(Tl) படிகங்கள் காற்றுப்புகாமலைடத்த ஒளிபெருக்கிக் குழாய்களில் பிணைக்கப்படுகின்றன. கதிர்வீச்சுக் கடினத்தன்மை, பின்னொளிர்வு, ஒளிபுகும் பண்பு முதலிய சில அளபுருக்களை படிக வளர்ச்சியில் சில மாறுதல்களைச் செய்வதன் மூலமாக அடையமுடியும். உயர்நிலை செயலூக்கம் பெற்ற படிகங்கள் அதிகத் தரமிக்க எக்சு கதிர் உணரிகளாகப் பயன்படுகின்றன. ஒற்றை அல்லது பலபடிக சோடியம் அயோடைடுகள் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இதனுடைய அதிகபட்ச அலைநீள வெளிப்பாட்டு அளவு 415 நா.மீஆகும்[5] கரைதிறன் தரவுகள்சோடியம் குளோரைடு அல்லது சோடியம் புரோமைடு போலில்லாமல் சோடியம் அயோடைடு சில கரிமக் கரைப்பான்களில் மிக நன்றாக கரைகின்றது. பல்வேறு கரைப்பான்களில் 25 0 செல்சியசு வெப்பநிலையில் ஒரு கிராம் NaI/100 கி கரைப்பானில் சோடியம் அயோடைடு பெற்றுள்ள கரைதிறன் அளவுகள் இங்கு தரப்பட்டுள்ளன[6]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia