சோனோபுடோயோ அருங்காட்சியகம், யோக்யகர்த்தா
சோனோபுடோயோ அருங்காட்சியகம் (Sonobudoyo Museum) இந்தோனேஷியா . ஜகார்த்தாவில் யோக்யகர்த்தா என்னும்ம இடத்தில் உள்ள ஜாவானிய வரலாறு மற்றும் பண்பாட்டு ஆகியவற்றின் அருங்காட்சியகம் ஆகும். இங்கு நூலகமும் உள்ளது. இந்தோனேசியாவில் உள்ள தேசிய அருங்காட்சியகத்திற்கு அடுத்தபடியாக, இந்த அருங்காட்சியகத்தில் ஜாவானிய கலைப்பொருட்களின் மிக முழுமையான சேகரிப்புகள் காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.[1] கற்காலத்தைச் சேர்ந்த மட்பாண்டங்கள் மற்றும் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வெண்கல சிற்பங்கள் ஆகியவை இங்கு உள்ளன. மேலும் ,இந்த வேயாங் (நிழல் பொம்மலாட்டம்) எனப்படும் பொம்மலாட்ட பொம்மைகள், பல்வேறு பழங்கால ஆயுதங்கள் (கெரிஸ் கத்தி போன்றவை), ஜாவானிய முகமூடிகள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.. சோனோபுடோயோ அருங்காட்சியகம் இரண்டு பிரிவுகளைக் கொண்டு அமைந்துள்ளது. முதல் பிரிவானது ஜலான் திரிகோரா எண் 6 யோக்யகர்த்தா என்னும் இடத்திலும், இரண்டாவது பிரிவானது நகரத்தின் முதன்மைப் பகுதியான (வடக்கு) அலுன்-அலூன் (கிராமங்கள் அல்லது நகரங்களின் நடுவில் அமைந்துள்ள ஒரு திறந்தவெளி சதுக்கம்) என்ற இடத்தின் கிழக்குப் பகுதியில் விஜிலன் என்னுமிடத்தில் உள்ள நடாலெம் சொண்ட்ரோகிரானன் என்னும் பகுதியில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்திற்கு வருகின்ற வெளிநாட்டு மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக வார நாட்களில் இரவு நேரங்களில் வேயாங் என அழைக்கப்படுகின்ற நிழற் பொம்மலாட்டம் மற்றும் கேமலன் என அழைக்கப்படுகின்ற இசைக்கருவிகளோடு அமைந்த நிகழ்ச்சி ஆகியவைகள் நடத்தப் பெறுகின்றன.[2] வரலாறுஜாவா இன்ஸ்டிட்யூட் என்பது ஜாவா, மதுரா, பாலி மற்றும் லோம்போக் ஆகியவற்றின் பண்பாடுகளை ஆய்வு செய்வதற்காக 1919 ஆம் ஆண்டில் சுரகார்த்தாவில் நிறுவப்பட்ட ஒரு அமைப்பாகும்.[3] 1924 ஆம் ஆண்டில், ஜாவா, மதுரா, பாலி மற்றும் லோம்பாக் ஆகிய பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தொகையைக் கொண்டு ஒரு அருங்காட்சியகத்தை அமைப்பதற்காக ஜாவா இன்ஸ்டிடியூட் என்ற அமைப்பு சுரகார்த்தாவில் ஒரு மாநாட்டை நடத்தியது. நவம்பர் 6, 1935 ஆம் நாளன்று சோனோபுடோயோ அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது. பின்னர் பொதுமக்கள் உள்ளே வந்து பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். ஜாவானிய மொழியில் சோனோ என்ற சொல்லுக்கு இடம் என்றும், புடோயோ என்ற சொல்லுக்கு பண்பாடு என்றும் பொருள் ஆகும். 1939 ஆம் ஆண்டில், ஜாவா இன்ஸ்டிடியூட்டின் செயல்பாடுகளைத் தொடர்ந்து ஆதரித்து வருவதற்கும், அதனை நிறைவேற்றுவதற்காகவும் குன்ஸ்டாம்பாக் பள்ளி அல்லது செகோலா கெராஜினன் சேனி உகிர் என்ற பெயரிலான செதுக்கு கலை மற்றும் கைவினைப் பள்ளி திறந்து வைக்கப்பட்டது.[4] 1974 ஆம் ஆண்டின் இறுதிக் கட்டத்தில், சோனோபுடோயோ அருங்காட்சியகம் கல்வி மற்றும் கலாச்சார அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் 2000 ஆம் ஆண்டில் இயக்குநரகம் ஜெனரலின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது. சோனோபுடோயோ அருங்காட்சியகம் 2001 ஆம் ஆண்டில் யோககர்த்தாவின் மாகாண கலாச்சார மற்றும் சுற்றுலா அலுவலகத்துடன் இணைந்தது. சிறப்புகள்இந்த அருங்காட்சியகத்தின் கட்டடடக்கலையின் சிறப்புக்கூறாக அதன் வாயிலைக் கூறலாம். இக்கட்டடத்தின் நுழைவாயில் கூடுஸ் பகுதியில் உள்ள மசூதியின் வாயிலைப் போலவே அது உள்ளது. அதன் வழியாக அரங்கம் மற்றும் முதன்மைக் கட்டடத்தை அது இணைக்கிறது. முதன்மைக் கட்டடம் ஜோக்லா என்றழைக்கப்படுகிறது. கோடாகேடே நகரைப் போல கூடுஸ் ஜாவா தீவுகளில் உள்ள முக்கியமான நகரமாகும்.[5] குறிப்புகள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia