சௌ. சீனிவாச ராகவையங்கார்
திவான் பகதூர் சேச ஐயங்கார் சீனிவாச ராகவையங்கார் (S. Srinivasa Raghavaiyangar) (18 ஜூலை 1849 - 11 திசம்பர் 1903) ஓர் இந்திய அரசு ஊழியரும், நிர்வாகியுமாவார். இவர் 1896 ஜூலை 15 முதல் 1901 அக்டோபர் 2 வரை வடோதராவின் திவானாகப் பணியாற்றினார். இவர் இந்தியப் பத்திரிகையாளர் எஸ். கஸ்தூரி ரங்க ஐயங்காரின் அண்ணன் ஆவார். ஆரம்ப கால வாழ்க்கைசீனிவாச ராகவையங்கார், 1849 ஜூலை 18 அன்று தஞ்சாவூர் மாவட்டத்தின் கங்காதரபுரத்தில் அரசு ஊழியர் எஸ். சௌந்தரராஜ ஐயங்காருக்குப் பிறந்தார்.[1] இவரது மூதாதையர்கள் விஜயநகரப் பேரரசிலும், தஞ்சாவூர் அரண்மனைகளிலும் உயர் அதிகாரிகளாக பணியாற்றியிருந்தனர். இவர், சென்னையில் கலைகளில் பட்டம் பெற்றார். இவர் 1880 கள்-1890களில் சென்னை மாகாணத்தின் பதிவுத்துறை தலைமை இயக்குநராகப் பணியாற்றினார்.[2] மகத்தான பணிஜூலை 1890 இல், இவர் அப்போதைய சென்னை ஆளுநர் கன்னிமாரா பிரபுவால் பதிவுத்துறை தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டார். இவர், சென்னை மக்களின் பொருளாதார நிலை குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டார். மேலும், 1893 ஆம் ஆண்டில்,பிரித்தானிய நிர்வாகத்தில் சென்னை மாகாணத்தின் முன்னேற்றத்திற்கான அறிக்கை இவரது மகத்தான பணியாகக் கருதப்படுகிறது.[2] மேற்கோள்கள்
குறிப்புகள்
மேலும் படிக்க
|
Portal di Ensiklopedia Dunia