காலனித்துவ கால சென்னை மாகாண ஆட்சியாளர்கள்காலனித்துவ கால சென்னை மாகாண ஆட்சியாளர்கள் (List of colonial Governors and Presidents of Madras), காலனித்துவ காலத்தில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் சென்னை மாகாணத்தின் முகவர்கள், ஆளுநர்கள், மற்றும் தலைவர்களின் பட்டியல்: பிரித்தானிய முகவர்கள்பிரித்தானியப் பேரரசுக்குக் கட்டுப்பட்ட பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் நிர்வாகி பிரான்சிஸ் டே என்பவர், 1639ல் சந்திரகிரி மன்னரின் அனுமதியுடன் சென்னையின் கடற்கரையை ஒட்டியப் பகுதிகளில் வணிகம் மேற்கொள்ள கட்டுமானங்களை துவக்கினார். முன்னர் மசூலிப்பட்டினத்தில் கம்பெனியினர் நிறுவியியிருந்த தொழிற்சாலைகளை, 1640ல் ஆண்ட்ரூ கோகன் என்பவர் சென்னைக்கு மாற்றினர். புனித ஜார்ஜ் கோட்டை கட்டி, அதில் கம்பெனியின் தலைமை அலுவலகத்தை நிறுவினர். இவ்வாறக முதன்முதலில் இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியின் சென்னை முகமை 1 மார்ச் 1640ல் நிறுவப்பட்டது. சென்னை முகமையின் முதல் முகவராக ஆண்ட்ரூ கோகன் நியமிக்கப்பட்டார். சென்னை முகவரி அலுவல் பெயர் புனித ஜார்ஜ் கோட்டையின் ஆளுநர் ஆகும். இருப்பினும் ஆளுநரை முகவர் என்றே அழைக்கப்பட்டார். ஆண்ட்ரூ கோனின் மூன்றாண்டு பணிக்குப் பின்னர் பிரான்சிஸ் டே சென்னை முகவராக நியமிக்கப்பட்டார். பின்னர் பதவியேற்ற நான்கு முகவர்களுக்குப் பின் வந்த ஆரோன் பேக்கர் முகவராக இருந்த காலத்தில், சென்னை முகமை, 1684ல் சென்னை மாகாணமாக தரம் உயர்த்தப்பட்டது.
கம்பெனி தலைவர்கள்சென்னை, 1684 முதல் 12 பிப்ரவரி 1785 முடிய மாகாணமாக விளங்கியது. 1784ல் இயற்றப்பட்ட பிட்டின் இந்தியச் சட்டத்தின் படி, பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியத் துணைக்கண்டப் பகுதிகளை கம்பெனியும், பிரித்தானியப் பேரரசும் கூட்டாக நிர்வாகம் செய்ய ஒரு தலைவரின் கீழ் கட்டுப்பாட்டு வாரியத்தை அமைத்தது. சென்னை மற்றும் மும்பை மாகாணங்களில் ஆளுனர்கள் தன்னிச்சையாகச் செயல்படும் உரிமையை இழந்து, கொல்கத்தா மாகாண ஆளுனரின் மேற்பார்வையில் செயல்படத் தொடங்கினர். கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியின் தலைநகராக கல்கத்தா விளங்கியது. இலிகு யேல் 8 ஆகஸ்டு 1684 அன்று சென்னை மாகாணத்தின் முதல் தலைவராக பொறுப்பேற்றார். இலிகு யேல், தாமஸ் பிட், மற்றும் ஜார்ஜ் மெகர்டினி ஆகியோர் சென்னை மாகாணத்தின் புகழ் பெற்ற தலைவர்கள் ஆவார். பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி ஆளுநர்கள்1746ல், தூப்ளேயின் படைகள் சென்னை நகரத்தை முற்றுகையிட்டு, கைப்பற்றியது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு சென்னைப் பகுதிகள், பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியில் கட்டுப்பாட்டில் இருந்தது. 1749ல் இருதரப்பினரும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, சென்னை மீண்டும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு ஒப்படைக்கப்பட்டது. 1749ல் சென்னையை மீண்டும் பிரித்தானியர்களிடம் வழங்கும் வரை சென்னை ஆளுநராக ஜீன்-ஜாக்ஸ் டுவால் டிபிரெம்மேன் ஆட்சி செய்தார்.
பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் தலைவர்கள்1746 முதல் 1749 முடிய சென்னை பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் கட்டுப்பாட்டில் இருந்த போது, பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனியின் தலைமையிடம் தற்காலிகமாக, சென்னையிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில், ஆந்திரா கடற்கரையில் உள்ள புனித டேவிட் கோட்டையில் இயங்கியது. 1752ல் சென்னையின் தலைவர் ஜான் சாண்டர்ஸ், கம்பெனியின் தலைமையிடத்தை மீண்டும் சென்னையின் புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றினார். 1760ல் வந்தவாசிப் போரில், பிரஞ்ச் கம்பெனிப் படைகளை வென்றதன், மூலம், சென்னை மாகாணத்தில் ஆங்கிலேய கம்பெனி ஆட்சி பன்மஅடங்கு விரிவடைந்தது. 1785ல் சென்னை மாகாணம் நிறுவப்பட்டு, அதன் தலைவரே, மாகாண ஆளுநராக பதவியேற்றார்.
ஆளுநர்கள் (பிரித்தானிய இந்தியா)பிரித்தானியப் பேரரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia