ச. கல்யாணசுந்தரம் (Shanmugam Kalyanasundaram) தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தினைச் சேர்ந்த பேராசிரியரும் அரசியல்வாதியும் ஆவார். இவர் 6 ஆகத்து 2022 முதல், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா செய்தித்தாளின் தலைமை ஆசிரியராக உள்ளார்.[1] 2010-இல் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி துவங்கியதிலிருந்து 2020 வரை அக்கட்சியின் மேடைப் பேச்சாளராகவும், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார்.[2] இவர் 2016 சட்டமன்றத் தேர்தலிலும்,[3] 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளராவார்.[4][5] இவர் பயணி என்ற வலையொளியில் அரசியல் குறித்து பேசிவருபவர் ஆவார். பின்பு 2020ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியில் இணைந்தார்.[6][7] கல்யாணசுந்தரம் மேதகு திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்துள்ளார்.
தேர்தலில் பெற்ற வாக்குகள்
மேற்கோள்கள்