நமது அம்மா (அதிமுக நாளிதழ்)
நமது புரட்சித்தலைவி அம்மா பிரபலமாக நமது அம்மா அறியப்படும், அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான செல்வி ஜெ. ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளான 2018 பெப்ரவரி 24 அன்று நாளிதழாக சென்னையில் துவக்கப்பட்டது. அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தி நாளிதழாக செயல்படும் நமது அம்மா நாளிதழ், குறைந்த பட்சம் 12 பக்கங்கள் கொண்டிருக்கும். நமது அம்மா நாளிதழின் தலைமை ஆசிரியர் ச. கல்யாணசுந்தரம் ஆவார்.[1] பின்னணிஜெ. ஜெயலலிதா, அதிமுகவின் அதிகாரப்பூர்வ அச்சு ஊடகமாக நமது எம் ஜி ஆர் எனும் நாளிதழையும், காட்சி ஊடகமாக ஜெயா தொலைக்காட்சியையும் துவக்கினார். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர், வி. கே. சசிகலாவின் குடும்பத்தின் பிடியில் இருந்த நமது எம்ஜிஆர் நாளிதழையும், ஜெயா டி வியையும் டி. டி. வி. தினகரன் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டார். அதனால் அதிமுக அரசின் செய்திகள் இந்நாளிதழிலும், தொலைக்காட்சியிலும் மறைக்கப்பட்டது. எனவே அதிமுக அரசு மற்றும் கட்சியின் செய்திகள் வெளியிடுவதற்கும் நமது அம்மா எனும் பெயரில் புதிய நாளிதழ் 2018 பெப்ரவரி 24 அன்று துவக்கப்பட்டது.[2] ஆர்.சந்திரசேகர் பத்திரிக்கையின் வெளியீட்டாளர் ஆனார்.[3][4] அதன் தொடக்கத்திலிருந்து, மருது அழகுராஜ் 2018 முதல் 2022 வரை பத்திரிகையின் தலைமை ஆசிரியராக இருந்தார். அவர் 2022 சூன் 29 அன்று ஒற்றைத் தலைமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் செய்தித்தாளின் தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து விலகினார்.[5][6] 2022 ஆகத்து 6 அன்று, ச. கல்யாணசுந்தரம் நமது அம்மா செய்தித்தாளின் தலைமை ஆசிரியர் ஆனார்.[7] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia