ஜகதாம்பி பிரசாத் யாதவ்
ஜகதாம்பி பிரசாத் யாதவ் (Jagadambi Prasad Yadav)(01 சனவரி 1925-20 சூலை 2002) என்பவர் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும், 1977 முதல் 1979 வரை பீகார் மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராகவும், பின்னர் மொரார்ஜி தேசாய் அரசாங்கத்தில் மாநில வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகவும் இருந்தவர் ஆவார். இவர் சார்க்கண்டு கோடா தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு 1996ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2002-ல் இறக்கும் போது, யாதவ், அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். 1981 முதல் 1984 வரை பீகாரில் பாரதீய ஜனசங்கம் மற்றும் பீகார் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்தார். இறப்புயாதவ் கட்சி தொடர்பான கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ள தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் நகருக்கு வந்தபோது திடிரென ஏற்பட்ட உடல்நலக் குறைவினால் சூலை 20, 2002 அன்று காலமானார்.[1] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia