ஜகந்நாத் கௌசல்
ஜெகநாத் கௌசல் (Jagannath Kaushal) (23 ஏப்ரல் 1915 - 31 மே 2001) இந்திய தேசிய காங்கிரசை சேர்ந்த அரசியல்வாதியாவார். 1982 முதல் 1985 வரை இந்திய அரசாங்கத்தில் சட்ட அமைச்சராக இருந்தார். 1936 இல் லாகூரிலுள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். 1937 இல் பாட்டியாலாவில் சட்டப் பயிற்சியைத் தொடங்கினார். 1947இல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், அரசு பட்டியாலா, கிழக்கு பஞ்சாபு அரசுகளின் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்ட பின்னர் இவர் 1949இல் தனது பதவியை விட்டு விலகினார். மீண்டும் சட்டப் பயிற்சிக்குத் திரும்பினார். ஆளுநர்1976 மற்றும் 1979 க்கு இடையில் பீகார் ஆளுநராக இருந்தார். 1980 இல், இவர் சண்டிகரிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், 1982 முதல் 1985 வரை மத்திய சட்ட அமைச்சராக இருந்தார். பிறா பணிகள்25 ஆண்டுகளுக்கும் மேலாக பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்த இவர் மக்களவையின் சலுகைகள் குழுவின் தலைவராக இருந்தார். சட்ட அமைச்சராக, இவர் ஜமைக்காவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் கடல்களின் சட்ட மாநாட்டின் இறுதி அமர்வில் கலந்து கொண்டார். மேலும், இந்தியா சார்பில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். பஞ்சாப், அரியானா உயர் நீதிமன்றங்களில், மரியாதை நிமித்தமாக இவர் இறந்த நாளில் வேலை நிறுத்தப்பட்டது.[2][3][4][5] இதையும் பார்க்கவும்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia