ஜமைக்கா தேசிய காற்பந்து அணி
ஜமைக்கா தேசிய காற்பந்து அணி ( Jamaica national football team) பன்னாட்டு காற்பந்து போட்டிகளில் ஜமைக்கா சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இது ஜமைக்கா காற்பந்துக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றது. வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பின் முதன்மை அணிகளில் இதுவும் ஒன்று. இந்த அணியினர் கரீபியன் கோப்பையை ஆறு முறை வென்றுள்ளனர்; கடைசியாக 2014ஆம் ஆண்டின் இறுதியாட்டத்தில் டிரினிடாடு மற்றும் டொபாகோ தேசிய காற்பந்து அணியை வென்று கோப்பையைக் கைப்பற்றினர்.[4] வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு தங்கக் கோப்பை இறுதியாட்டதிற்கு முன்னேறிய ஒரே கரீபியன் நாடாக ஜமைக்கா உள்ளது; 2015ஆம் ஆண்டில் தங்கக் கோப்பை இறுதியாட்டத்தில் பங்கேற்று மெக்சிக்கோவிடம் தோற்றது. ஜமைக்கா உலகக்கோப்பை காற்பந்து இறுதிப் போட்டிகளுக்கு ஒருமுறை (1998) தகுதி பெற்றது. ஐக்கிய அமெரிக்கா, ஹொண்டுராஸ், கோஸ்ட்டா ரிக்கா போன்று மெக்சிக்கோவுடன் உலகக்கோப்பை தகுதியாட்டத்தில் சமநிலை எய்திய கான்காகேஃப் அணிகளில் இதுவும் ஒன்றாகும்.[5] மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia