ஜயக்கொடி
ஜயக்கொடி (Jayakodi) என்பது 1940 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் சமூக சிக்கல் குறித்த திரைப்படமாகும்.[1] பாக்வன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. நடராஜன், கே. டி. ருக்மணி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது இந்தியாவில் நிலவிவரும் வரதட்சணை முறைக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் ஒரு பெண்ணை மையமாகக் கொண்டதாக உள்ளது. இப்படம் 17 மார்ச் 1940 இல் வெளியாகி வெற்றி பெற்றது. ஆனால் இதன் எந்தப் பிரதியும் எஞ்சி கருத வேண்டியுள்ளது. கதைஏழை பிராமணப் பெண்ணான ராஜத்துக்கு (ருக்மணி), வரதட்சணை கொடுத்து திருமணம் செய்துவைக்கும் அளவுக்கு குடும்ப சூழல் இயலாமையால் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறாள். ராஜத்தின் பக்கத்து வீட்டுக் குடும்பம் ராஜத்தின் குடும்பத்திற்கு அவ்வப்போது உதவி செய்தாலும், அவளுக்கு திருமணம் செய்து வைக்கும் முயற்சிகள் தோல்வியடைகின்றன. இதற்கிடையே பண ஆசை கொண்ட கந்துவட்டிக்காரன், ராஜமின் தந்தையைக் கொன்று அவர்களின் வீட்டுக்குத் தீ வைக்கிறான். இதனால் ஆவேசம் கொள்ளும் ராஜம் ஒரு சமூக ஆர்வலராகி வரதட்சணை முறைக்கு எதிராக போராடுகிறாள். இதன் பிறகு இவள் "ஜயக்கொடி" என்று அழைக்கப்படுகிறாள். மேலும் வரதட்சணை கோரும் மாப்பிள்ளைகள் மர்மமான முறையில் காணாமல் போகத் தொடங்குகிறார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது இருக்கும் மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள். பல வரதட்சணை பிரச்சனைகளை ராஜம் தீர்த்து வைக்கிறாள். பிறகு தன்னை உண்மையாக நேசிக்கும் ஒருவரை திருமணம் செய்து கொள்கிறாள். மேலும் அந்த இணையர் வரதட்சணை முறைக்கு எதிரான போரை தொடர்கின்றனர்.[2] நடிப்பு
தயாரிப்புசவுத் இண்டியன் யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் கார்ப்பரேஷன் தயாரித்த ஜெயக்கொடி படத்தை, பகவான் தாதா கதை எழுதி இயக்கினார். உரையாடலை பி. வி. சுவாமியும், எஸ். ஆர். சாரங்கனும் இணைந்து எழுதினர். ஒளிப்பதிவை அகமதுல்லாவும், படத்தொகுப்பை எஸ். குமாரும் மேற்கொண்டனர்.[3] இசைஇப்படத்திற்கு சி. ராம்சந்திரா இசை அமைத்தார். பாடல் வரிகளை சி. முருகேசம் எழுதினார்.[2][3]
பாடல் - பாடகர்/கள்
வெளியீடும் வரவேற்பும்ஜெயக்கொடி 17 மார்ச் 1940 அன்று வெளியாகி,[3] வணிக ரீதியாக வெற்றி பெற்றது. இதன் வெற்றியானது ருக்மணியை ஒரு நட்சத்திரமாக நிலைநிறுத்தியது. படத்தின் வெற்றியால் படத்தின் நாயகனான நடராஜன் அதன் பிறகு ஜயக்கொடி நடராஜன் என அழைக்கப்பட்டார். படத்தின் எந்தப் பிரதியும் எஞ்சி இருப்பதாகத் தெரியவில்லை, இதனால் இல்லாமல் போன படமாகக் கொள்ள வேண்டியுள்ளது.[2] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia