பிலிம் நியூஸ் ஆனந்தன்
பிலிம் நியூஸ் ஆனந்தன் (Film News Anandan) எனப்படும் பி. ஜி. அனந்த கிருஷ்ணன்[5] (பிறப்பு; சென்னை 1928[6] - 21 மார்ச் 2016) என்பவர் தமிழ்த் திரைப்பட உலகின் தகவல் களஞ்சியம் என அழைக்கப்பட்டவர். இவர் சென்னையில் பிறந்தவர். பணிகள்திரைப்படத் துறையில் மக்கள் தொடர்புப் பணியில் இருந்த ஆனந்தன் தமிழ்த் திரைப்பட நடிகர், நடிகை, இயக்குநர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் என அனைத்துத் திரைப்படத் துறையினர் குறித்த தகவல்களையும் சேகரித்து வைத்திருந்தார். சென்னையில் பல ஆண்டுகளாக “பிலிம் நியூஸ்” என்ற திரைப்படச் செய்தி நிறுவனத்தை நடத்தி வந்தார். இதனால் இவர் பிலும் நியூஸ் ஆனந்தன் என்று அழைக்கப்பட்டார்.[7] இவரிடமிருந்த தமிழ்த்திரைப்பட செய்திக் கோப்புகளையும் ஆவணங்களையும் தொகுத்து நூலாக வெளியிட தமிழ்நாடு அரசு நிதியுதவி செய்தது. “சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு” என்ற பெயரில் இந்நூல் வெளியிடப்பட்டது.[8][9] விருதுகள்திரைப்பட வரலாற்றாசிரியராக மனித முன்னேற்றத்திற்கு ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்காக ஒய். வெங்கண்ணா கிளவுடரியின் "கலா பீடம்" விருதை ஆனந்தன் பெற்றார். 1991-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு இவருக்கு கலைமாமணி விருதினை வழங்கி கௌரவித்தது. 1989-இல், ஃபிலிம் சேம்பர் பொன்விழாவின் போது ஆனந்தன் ஒரு மூத்த கலைஞராகக் கௌரவிக்கப்பட்டார்.[7] சென்னையில் உள்ள தென்னிந்திய கலைஞர்கள் சங்கம், இவருக்கு "கலைச் செல்வம்" எனும் பட்டத்தினை வழங்கியது.[7] மே 2008-இல், விஜய் தொலைக்காட்சி 2ஆவது விருதுகள் விழாவில், தமிழ் சினிமாவுக்குப் பங்களித்ததற்காக இவருக்கு விஜய் விருது வழங்கப்பட்டது.[10] இறப்புபிலிம் நியூஸ் ஆனந்தன் சென்னை, கோடம்பாக்கத்தில் 2016 மார்ச் 21 அன்று காலமானார்.[11] குறிப்புகள்மேற்கோள்கள்
வெளி இணைப்பு |
Portal di Ensiklopedia Dunia